பிஎஸ்சியை பெர்சே தலைவர் என்ற முறையில் சந்திப்பேன், அம்பிகா

பெர்சே 2.0 இயக்கம் சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தாம் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அவ்வியக்கத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திபேன் என்று அம்பிகே சீனிவாசன் வலியுறுத்தினார்.

“என்னைப் பொறுத்தவரையில், நான் பிஎஸ்சியை சந்தித்தால், நான் அவர்களை பெர்சே 2.0 வின் தலைவர் என்ற முறையில்தான் சந்திப்பேன். நான் பெர்சே 2.0 இன் கருத்துகளைப் பிரதிநிதிப்பேன்”, என்று குவாந்தானில் “பசுமை ஒற்றுமை 109” நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்ற பின்னர் அவர் கூறினார்.

பிஎஸ்சியின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கீலி  பெர்சே 2.0 சட்டவிரோத அமைப்பாகையால் அது வரவேற்கப்படவில்லை, ஆனால் அதன் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கலாம் என்று தன்னிச்சையாக கூறியிருந்தார்.

“அவர்கள் எனக்கு என்ன அளிக்க விரும்புகிறார்கள் என்பதில் பிரச்னை இல்லை. நான் அதில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

“ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் பெர்சே 2.0 ஐ பிரதிநிதிக்கிறேன்”, என்று அம்பிகா கூறினார்.

இரு தரப்பினரும் சொற்பொருள் ஆய்வியலில் சிக்கிக்கொள்ளக்கூடாது ஏனென்றால் நோக்கம் உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களை பெறுவதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். நாங்களும் கூட மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். நமது வேலையைத் தொடர்வோம்”, என்றார் அம்பிகா.

TAGS: