‘சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன இராணுவப் பிரிவு’

iran_cyber_attackகணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள மண்டியண்ட் என்னும் அந்த நிறுவனம், இவற்றுக்கு அதிகபட்ச காரணமாக 61398 எனும் இராணுவப் பிரிவு இருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அந்தப் பிரிவு பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள பரந்துபட்ட தொழில்துறையில், நூற்றுக்கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை திருடியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று இதனை சீன வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.