“ஐஜிபி அவர்களே, லாஹாட் டத்துவில் நீங்கள் உண்மையில் என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”

hisham“நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?”

லாஹாட் டத்துவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்கிறார் ஐஜிபி

பீரங்கி: இந்த ஆட்சி நாட்டின் பிரதேச ஆட்சியுரிமையைக் கூட பாதுக்காக்கும் ஆற்றல் இல்லாதது என்பதை லாஹாட் டத்து அத்தியாயம் நமக்கு உணர்த்துகின்றது. குடிமக்களை சாலைகளில் நிகழும் குற்றங்களிலிருந்து மட்டுமின்றி கொள்ளைக்காரர்களிடமிருந்து கூட காப்பாற்றும் திறமை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லை.

சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் ஒரு கிராமத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்தக் கிராம மக்கள் அங்கிருந்து உயிருக்குப் பயந்து வெளியேறி விட்டனர். அவர்களுடைய பாதுகாப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் மருட்டல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஊடுருவல்காரர்கள் “தீவிரவாதிகளும் அல்ல, பயங்கரவாதிகளும் அல்ல’ என உள்துறை அமைச்சர் முட்டாள்தனமாக பிரகடனம் செய்கிறார்.

இந்த நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து அதிகாரிகளுக்கு சவால் விடுகின்ற அந்த ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தீவிரவாதிகள் எனக் கருதப்படவில்லை. ஆனால் பெர்சே பேரணிகளில் அமைதியாக கலந்து கொள்ளும் மக்கள் தேசியப் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் மருட்டல் என முத்திரையிடப்படுகின்றர்.

இந்த ஆட்சி எப்படி கதை விடுகிறது பார்த்தீர்களா ? நல்லது தீயதாகவும் தீயது நல்லதாகவும் காட்டப்படுகின்றது. இந்த ஆட்சியை மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலில் அகற்ற வேண்டும். இல்லை என்றால் நமது நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

டெலிஸ்டாய்!: லாஹாட் டத்து இழுபறி தொடர்பில் சமூக இணைய ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்பதால் கவலைப்படக் கூடாது எனச் சொன்னதைத் தவிர வேறு எதனையும் ஐஜிபி தெரிவிக்கவில்லை.

அரச மலேசியப் போலீஸ் படை மீதான நம்பிக்கை பெரிதும் குறைந்துள்ள வேளையில் அவருடைய அந்த வார்த்தைகள் உண்மையில் ஆறுதல் அளிக்கின்றன.

அடையாளம் இல்லாதவன்#44199885: “நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்” எனச் சொல்லும் போலீஸ் படைத் தலைவருடைய அதிசயத்தக்க விவேகத்தை நாம் பாராட்ட வேண்டும்.

ஆயுதம் இல்லாத நட்புறவான மலேசியர்கள் கலந்து கொண்ட அமைதியான பெர்சே பேரணிக்கு எதிராக டாத்தாரான் மெர்தேக்கா என அழைக்கப்படும் சிறிய நிலத்தைத் தற்காக்க போலீஸ் எப்படி உடனடியாக ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்களை அனுப்ப முடிந்தது ? ஆனால் நமது நாட்டின் மீது படையெடுத்துள்ள ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கு போலீசார் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

அரமெகடோன்: போலீஸ், துப்பாக்கிகளை வைத்துள்ள மக்களிடம் மிகவும் நல்ல விதமாக நடந்து கொள்கிறது. ஆனால் கனிம நீரையும் உப்பையும் வைத்திருந்த மலேசியர்களிடம் அது கடுமையாக நடந்து கொள்கின்றது.

ஒஸ்கார் கிலோ: நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள்.ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?

ஸ்டார்ர்:  நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என ஐஜிபி சொல்கிறார். ஆனால் அவர்கள் ஆயுதங்களுடன் வருவது உங்களுக்குத் தெரியுமா ?

போலீசார் கண்களுக்குத் தெரியாமல் நமது எல்லைகளை அந்த ஆயுதமேந்திய நபர்கள் அப்பட்டமாக மீறியுள்ளனர். ஆகவே போலீஸ் படை மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என ஐஜிபி எப்படி எதிர்பார்க்க முடியும் ?

லாவ் கோக் கோக்: மலேசியாவுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் யாரும் ‘நாட்டின் எதிரிகளாக’ கருதப்பட வேண்டும். ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் ‘நாட்டி எதிரியாக’ கருதப்படும் போது அந்த சுலு படையெடுப்பாளர்கள் கௌரவமான விருந்தினர்களைப் போன்று ஏன் நடத்தப்படுகின்றனர் ?

ஒப்பா: அந்த ஊடுருவல்காரர்களுக்கு எங்கிருந்து உணவும் தண்ணீரும் கிடைக்கின்றன ? 11 நாட்களுக்குப் போதுமான பொருட்களுடன் அவர்கள் நிச்சயம் மலேசியாவுக்குள் வந்திருக்க முடியாது. நமது வரிப்பணம் அவர்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படுகின்றதா ?

பால் வாரென்: அவர்களுக்கு மை கார்டுகளை கொடுத்து அவர்களைப் பிரஜைகளாக்கி விடுங்கள். அதே வேளையில் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடுங்கள். அதனால் அவர்கள் 13வது தேர்தலில் அம்னோவுக்கு வாக்களிக்க முடியும்.

அவர்கள் நிச்சயம் அதற்கு ஒப்புக் கொள்வர். ஐஜிபி-யின் நிலை பரிதாபமாக உள்ளது. அவர்கள் 100 மட்டுமே என போலீஸ் சொல்கிறது. ஆனால் மொத்தம்  400 பேர் இருப்பதாக சுலு சுல்தான் கூறுகிறார்.  அவர்களில் 20 பேரிடம் மட்டுமே ஆயுதங்கள் உள்ளன.

எல்ஜேசி: நிலைமை கட்டுக்குள் இருக்கிறது ஆனால் அது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் ?

 

TAGS: