பாஸ்: அஜிஸான் கெடாவில் தேர்தலில் நிறுத்தப்படுவார்

azizanகெடா மந்திரி புசார் உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்கிய போதிலும் வரும் பொதுத் தேர்தலில் அவரை நிறுத்துவது எனப் பாஸ் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது.

“அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்,” எனக் கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொன்னார்.

“அஜிஸான் உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்குவதால் அவர் சுமையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுவதை அப்துல் ஹாடி நிராகரித்தார்.

“ஒவ்வொருவருக்கும் ஏன் எனக்கும் கூட உடல் நலக் கோளாறுகள் உள்ளன,” என்றார் அவர்.

அஜிஸானை கெடா மந்திரி புசாராக பாஸ் முன்மொழியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அப்துல் ஹாடி வேட்பாளர் நியமன நாளன்று அது அறிவிக்கப்படும் என்றார்.

அஜிஸானுடைய உடல் ஆரோக்கியப் பிரச்னைகளும் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுடன் அடிக்கடி மோதலை ஏற்படுத்திய அவருடைய தலைமைத்துவப் பாணியும் கெடா பாஸ்-க்கு அவர் மீண்டும் தலைமை தாங்க பாஸ் அனுமதிக்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அவர் 2005ம் ஆண்டு இருதய நாள அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு 2011ல் angioplasty சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
.