‘இண்ட்ராப், நாம் மாறத்தான் வேண்டும்; ஆனால், சரியான திசைநோக்கி மாற வேண்டும்’

hindrafஉங்கள் கருத்து: ‘நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை…. நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி’.

தவறான தடத்தில் இண்ட்ராப்

நல்லநாளாக இருக்கட்டும்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஒரு தீவிரமான நிலையைக் கைக்கொண்டிருக்கும்போது இது நியாயமான வாதமாக தெரிகிறது.

வேதாவும் ஒரு நடுவுநிலை பாதையை முன்னெடுப்பாரா அல்லது அம்னோபுத்ராக்களின் காரணமாக வழிமாறிச் செல்வாரா?

பூன்பாவ்: கணபதி ராவும் வி.வசந்தகுமாரும் உண்மையான இண்ட்ராப் தலைவர்கள். அவர்களைப் போல் மேலும் பலர் முன்வந்து தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். காலனிய கால சிந்தனையிலிருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், மலேசியா இன-அடிப்படையிலான அரசியலை விட்டொழிப்பது முக்கியம்.

ஓர் உண்மையான சமூக ஜனநாயகம் என்பது இன, சமய வேறுபாடு பாராமல் தேவையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்திய ஏழைகளுக்கு மட்டுமே சமுதாய சீரமைப்பு தேவை என்று  இண்ட்ராப் தலைவர்கள் சிலர் பிடிவாதம் பிடிப்பார்களானால் அப்படிப்பட்டவர்களை விட்டு விலகி இருப்பதே பக்காத்தானுக்கு நல்லது.

ஆதலால், மாற்றம் தேவைதான்.  ஆனால் அது சரியான திசைநோக்கிய மாற்றமாக இருத்தல் வேண்டும்.

ஆர்ஆர்: அன்வார் இப்ராகிம் இந்திய ஏழை மக்களுக்கான இண்ட்ராபின் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதுடன் அவர்களைப்போல் ஏழைகளாக உள்ள மற்றவர்களின் துயரங்களையும் தீர்ப்பாரானால் அது எல்லா ஏழை மக்களுக்கும் மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும்.

பக்காத்தான் அதன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால் 14வது பொதுத் தேர்தலில் அதைத் தூக்கி எறிவோம்.

கொங்மிங்:  இனம், நிறத்தைமீறி சிந்திக்கும் இண்ட்ராப் தலைவர்களும் இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை…. நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி.

இந்தியர்கள் பின்தங்கிக் கிடப்பது உண்மையே. ஆனால், மற்ற இனங்களிலும் அதே நிலையில் உள்ளவர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

முக்கியமானது என்னவென்றால் பக்காத்தான் மக்களை ஏமாற்றக்கூடாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஆனால், எந்த அரசியல்வாதி கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறார்?

டிம்: இண்ட்ராப் செயல்திட்டம் என்ற ஒன்று இருந்தாலும்,  இல்லாவிட்டாலும் பக்காத்தான் இந்தியர்களின் நலன் காக்கும் என்றே நம்புகிறேன்.

சாலைக் கட்டணத்தை அகற்றுதல், பல்கலைக்கழகம்வரை இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுங்க வரியை 20 விழுக்காடு குறைத்தல் முதலிய திட்டங்களால் இந்தியர்கள் நன்மை அடைய மாட்டார்களா? பக்காத்தான், உதவி தேவைப்படும் அனைவருக்கும் உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த முயல்கிறது.

இது கோரிக்கைகளை முன்வைக்கும் நேரமல்ல. இந்தியர்களோ, சீனர்களோ, கடாசான்களோ, இபான்களோ, மலாய்க்காரர்களோ, ஒருவர் மற்றவரின் நலன்கருதி  உழைக்க வேண்டும்.

இண்ட்ராபைப் போல இன்னொரு தரப்பு,  சீனர்களுக்கும் அதேபோன்ற செயல்திட்டம் தேவை என்று வலியுறுத்தி அப்போதுதான் பக்காத்தானுடன் ஒத்துழைப்போம் என்று கூறினால் என்னவாகும். அந்த அளவில் அது நின்று விடாது. 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் மேலும் துன்புறுவர்.

TAGS: