அம்னோ அரசியல் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது

may“கடந்த காலத்தை கடந்த காலமாகவே விட்டு விட அம்னோ தயாராக இல்லை எனத் தோன்றுகிறது. அதற்கு வெறுப்பு மட்டும் தான் தெரியும் என்றால் நாம் அதனை கடந்த காலமாக்கத் தயங்கக் கூடாது”

தண்டா புத்ரா இரு பக்கமும் கூர்மையான கத்தி

அபசலோம்: தண்டா புத்ரா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நேரம் ஆட்சியாளர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள், விரக்தி அடைந்தவர்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

இனங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தூண்டி விட்டு அதனால் பொருளாதாரத்திற்கும் வர்த்தகங்களுக்கும் ஏற்படக் கூடிய இழப்புக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. எல்லா இனங்களையும் சார்ந்த மலேசியர்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாலும் உண்மையான பிரச்னைகளை நன்கு அறிந்துள்ளதாலும் (பெர்சே பேரணிகளில் அது தெளிவாகத் தெரிந்தது) பதற்ற நிலைக்கு இப்போது வாய்ப்பு அதிகமில்லை.

பக்காத்தான் ராக்யாட் பல இனங்களைக் கொண்டுள்ளது. ஒர் இஸ்லாமியக் கட்சியான பாஸ்-க்கு முஸ்லிம் அல்லாதார் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். 1969க்குப் பின்னர் மக்கள் முதிர்ச்சி அடைந்து விட்டதையே அது உணர்த்துகின்றது.

பல்வேறு இனங்களைச் சார்ந்த மலேசியர்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதில்லை. மாறாக அவர்கள் இப்போது நாட்டை பாதித்துள்ள ஊழல், அநீதி, அதிகார அத்துமீறல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றிணைந்துள்ளனர்.

கீ துவான் சாய்: அந்தத் திரைப்படம் குறித்து கேரி ரினா சொல்வதைப் பார்த்தால் அது ஒரு தலைச் சார்பானது,மேலோட்டமானது, ஆழமில்லாதது, சிந்தனைகளை தூண்டவில்லை என்பது தெரிகிறது. இயக்குநர் ஷுஹாய்மி பாபா இந்த அளவுக்கு பிரச்சார ஊழியராக தாழ்ந்து போயிருப்பது எனக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது.

கிம் குவேக்: பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அம்னோவின் ரகசிய ஆயுதம் ஏவப்பட்டு விட்டது. சீனர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் மலாய்க்காரர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும் சித்தரிக்கும் அந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மைகளைத் திசை திருப்புவதாகும்.

இன வெறுப்பையும் அச்சத்தையும் தூண்டி விடுவதே மலாய் ரசிகர்களுக்கு மட்டும் அந்தத் திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளதின் நோக்கமாகும். ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் மலாய்க்காரர்கள் அம்னோவை நாடுவர் என்பதும் அம்னோவின் எண்ணமாகும். உண்மையில் சில அம்னோ தலைவர்களுடைய அதிகார வெறியால் மலாய்க்காரர்களும் சீனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மோசமான தேர்தல் தந்திரம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டு முகத்தையும் ஏமாற்றும் குணத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. நாட்டை இனக் கலவரங்கள் சூழும் அபாயம் இருந்தாலும் பரவாயில்லை, அரசியல் அதிகாரத்தை தாமும் தமது கட்சியும் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

அம்னோ தலைவர்களுடைய அதிகார வெறிக்கு 1969ம் ஆண்டு நாம் ஒரு முறை பலிகடாவாக்கப்பட்டு விட்டோம். பல இனங்களையும் சார்ந்த மலேசியர்களாகிய நாம் மீண்டும் அதற்கு இரையாகக் கூடாது.

பொருத்தம்: கடந்த காலத்தை கடந்த காலமாகவே விட்டு விட அம்னோ தயாராக இல்லை எனத் தோன்றுகிறது.  அதற்கு வெறுப்பு மட்டும் தான் தெரியும் என்றால் நாம் அதனை கடந்த காலமாக்கத் தயங்கக் கூடாது.

நாம் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கு வெளியே செல்லும் கதவைக் காட்ட வேண்டும்.

ஒப்பா: அந்தத் திரைப்படத்தின் முக்கியமான அங்கம், வரி செலுத்தும் மலேசியர்களாகிய நாம் அதன்  தயாரிப்புக்குப் பணம் கொடுத்துள்ளதாகும். பொய்களை பரப்புவதற்கும் 13வது தேர்தலில் மலாய்க்காரர்களிடம்  அச்சத்தை ஏற்படுத்தி பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு செய்வதற்கும் ஏற்படுத்துவதற்கும் அதனை அம்னோ ‘இலவசமாக’ பயன்படுத்திக் கொள்கிறது.

TAGS: