” நாட்டின் அதிகரித்துவரும் கடன்சுமையைக் குறைக்க நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்குமே, அதை எண்ணி அழுதேன். என் குழந்தைகளும் இந்தக் கடன்சுமையைக் குறைக்க பாடுபட வேண்டியிருக்குமே, அதை எண்ணி அழுதேன்.”
பிரதமர்: எனக்கு நன்றி தெரிவித்த ‘அவர்களின் கண்களில் கண்ணீரை’க் கண்டேன்
குய்கோன்போண்ட்: அவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பவர்கள்.அதனால்தான் சிறிய உதவிகளைப் பெற்றாலும் கண்கலங்கி விடுகிறார்கள். அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? 53 ஆண்டுகளாக ஊழலுக்குத் துணைபோயும், வேண்டியவர்களுக்கு மட்டும் படியளந்தும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் வந்திருப்பதுடன் இப்போது உச்சக்கட்டமாக தவறான கொள்கைகளுக்கு நிதியளிப்பதற்காக முன் எப்போதுமில்லாத அளவுக்கு நாட்டை மிகப்பெரிய கடனாளிக்கி வைத்துள்ள பிஎன் நிர்வாகம்தானே இதற்குக் காரணம்.
வாக்குகள் பெறக் கடன்வாங்குவதும், கடனைத் தீர்க்கும் பிரச்னையை அடுத்துவரும் தலைமுறைகளின் தலையில் கட்டிவிடுவதும் பெருமைபடத்தக்க செயலல்ல.
நான் என்றும் பக்காத்தான் ரக்யாட் பக்கம்தான். புக்கு ஜிங்கா, அடிப்படைச் சம்பளம் பற்றி, நாட்டின் வளம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுவது பற்றி, நடைமுறைச் செலவுகளைக் குறைப்பது பற்றி, திறந்தநிலை டெண்டர்கள் பற்றி, ஊழலுக்கு எதிராக உண்மையான போராட்டம் நடத்தி அதன்வழியே உற்பத்தியைப் பெருக்கிப் போட்டியிடும் தன்மையை அதிகரிப்பது பற்றிப் பேசுகிறது.உலகப் பொருளாதாரம் நெருக்கடிக் கட்டத்தை நோக்கிச் எல்லுகின்றபோது இப்படிப்பட்ட சமநோக்குள்ள அணுகுமுறைகள் அன்றோ நமக்குத் தேவை.
இசானா: பிரியாவிடை அளிக்கும்போது அப்படித்தான் நடந்துகொள்வோம். அந்த ஈஜோக் மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்குத் தெரியும் 13 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பது.
நம்பாதவன்: பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தில் இரண்டு விழுக்காடு உயர்வு என்பது ஓர் அற்பத் தொகை.மாதம் தோறும் ரிம500 ஓய்வூதியம் பெறும் ஒருவருக்கு என்ன கிடைக்கும். ரிம10 கூடுதலாகக் கிடைக்கும்.இந்த பத்து ரிங்கிட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால் அரசாங்கத்துக்கு வரியாக ஆறு விழுக்காடு செலுத்த வேண்டியிருக்கும்.பணி ஓய்வு பெற்றவர்களும் கொடுக்கத்தான் வேண்டும். அரசாங்கம் உண்மையிலேயே பரிவுகொண்டிருந்தால் 60 வயதுக்கு மேற்பட்டு ரிம1,000-க்குக் குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசாங்க வரிகளிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
எஸ்எம்சி77: ஒரு நல்ல தலைவர் என்றால், பணி ஓய்வு பெற்றோரும் மற்ற முதியவர்களும் நல்ல உணவின்றி பட்டினியால் வாடுவதைக் காணும்போது கண்ணீர் சிந்துவார். 54 ஆண்டுகளுக்குப் பிறகும் பணிஓய்வுக் காலத்தை நல்லமுறையில் கழிக்க முடியாமல் இவர்கள் பரிதவிப்பது ஏன் என்று நஜிப் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெயரிலி: நஜிப், திங்கள்கிழமை காலையில் மிட்வேலிக்கு மெட்ரோ பேருந்தில் சென்று பார்க்க வேண்டும். பயணிகளோடு பயணியாக அமர்ந்து பயணம் செய்து பாருங்கள்.அப்போது தெரியும் எத்தனை பேர் உங்கள் கைகளை விடாமல் பிடித்துக்கொள்கிறார்கள் என்பது.
பெயரிலி பெர்சே: அடுத்த தேர்தலில் வாக்குகள் குறைந்துபோகுமோ என்ற பயம் பிரதமருக்கு.அதுதான் 2012 பட்ஜெட்டில் இவ்வளவு தாராளமாக நடந்துகொண்டிருக்கிறார். எதிர்வரும் தேர்தலில் பிஎன் மூன்றுக்கு-இரண்டு என்பதற்கும் மேலான பெரும்பான்மை கிடைக்கட்டும். அதன்பின் பாருங்கள், அடுத்த பட்ஜெட்டில் இப்படிப்பட்ட சலுகைகள் இருக்கிறதா என்று.
இடைத்தேர்தல் விரும்பி: வெள்ளிக்கிழமை பட்ஜேட் உரை கேட்டு கண்கலங்கி விட்டது. ஏதோ கடன்(கிரெடிட் கார்ட்) வைத்திருப்பதுபோல் அல்லவா நடந்துகொண்டிருக்கிறீர்கள். வருங்காலத் தலைமுறையை எண்ணி அழுதேன். 1.2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தொருக்கிறீர்கள். இதனால் நாடு பல தலைமுறைகளுக்குக் கடன்தொல்லையால் தத்தளிக்கப் போகிறது.
மிகுந்த நம்பிக்கை உள்ளவர்போல் பேசும் நீங்கள் பொதுத் தேர்தல் எப்போது என்பதைத் தயைகூர்ந்து அறிவிக்க வேண்டும்.ஏனென்றால் பிஎன்/அம்னோ ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நாளும் எங்களுக்கு தொல்லை கூடிக்கொண்டுதான் போகும்.
முகம்மட்: பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைக் கேட்டு என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. “கெடுதலை”ச் செய்யும் இந்தப் பட்ஜெட்டை எளிதில் நம்பி மோசம்போவோரும் இருப்பார்களே அவர்களை நினைத்து அழுதேன். நாட்டின் அதிகரித்துவரும் கடன்சுமையைக் குறைக்க நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்குமே, அதை எண்ணி அழுதேன். என் குழந்தைகளும் இந்தக் கடன்சுமையைக் குறைக்க பாடுபட வேண்டியிருக்குமே, அதை எண்ணி அழுதேன்.