அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு இறுதி முடிவு செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான ஒலிபரப்பு நேரத்தையும் வாய்ப்புக்களை விநியோகம் செய்வது மீது ஆய்வு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
“எதிர்க்கட்சிகளுக்கு ஒலிபரப்பு நேரத்தைப் பெறுதற்கு உரிமை உண்டு. ஆனால் எந்த தேர்தல் கொள்கை அறிக்கையை அவை பயன்படுத்தும் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். மூன்று கட்சிகள் இணைந்துள்ள எதிர்த்தரப்புக் கூட்டணியிடமிருந்து வருவதா ? மற்ற கட்சிகளைப் பற்றி என்ன சொல்வது ? ஒலிபரப்பு நேரத்தை விநியோகம் செய்வது பற்றியும் நாங்கள் ஆராய்வோம். மக்களவையில் உள்ள இடங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அது இருக்க வேண்டுமா ?”.
அவை தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை வழங்குவதற்கு ஒலிபரப்பு நேரம் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்,” என ஜோசப் சாலாங், கோலாலம்பூரில் அனைத்துலக மாநாடு ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
High Definition TV (HDTV) என்னும் நவீன முறையை பரவலாகப் பயன்படுத்தும் முன்னர் பல்வேறு சவால்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
“HDTV பயன்பாடு பிரபலமாகி வருவதை நாம் அறிவோம். ஆனால் நாம் எதிர்நோக்கும் பல சவால்களும் உள்ளன. கிராமப்புறங்களில் மின் விநியோகம் உறுதியற்றதாக இருப்பதும் அவற்றில் ஒன்றாகும்,” என அவர் மேலும் சொன்னார்.
பெர்னாமா