அன்வார்: பிரதமர் தேர்வு ஒரு பிரச்னையே அல்ல

1anvபக்காத்தான் ரக்யாட் ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

நேற்று பக்காத்தான் மாநாட்டிலேயே இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்கிறபோது மற்றவர்கள் ஏன் இதை “ஒரு பிரச்னையாக” நினைக்கிறார்கள் என்றவர் வினவினார்.

“பிஎன் கொள்கைவிளக்க அறிக்கையிலும்கூட யார் பிரதமர் என்ற அறிவிப்பு இல்லையே.

“2008-இலும் இப்படித்தான், அறிவிப்பு எதுவும் இல்லை.  காலிட் (இப்ராகிம்) சிலாங்கூர் மந்திரி புசார் ஆவார் என்றோ அன்வார்… ஆவார் என்றோ அறிவிக்கப்பட்டதா? இல்லையே”.

பக்காத்தான் பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவற்றின் கருத்திணக்கத்துடன் செயல்படுகிறது என்றும் அன்வார் கூறினார்.