“நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்தாலும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த டெண்டர் வழியாக கிடைத்தால் தவிர பெட்ரோனாஸ் குத்தகைகளில் சம்பந்தப்படவே கூடாது”
டாக்டர் மகாதீர்: என் புதல்வருடைய பெட்ரோனாஸ் குத்தகைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை
மிலோசெவிக்: மலேசிய அரசியலில் மய்யமாக அவர் இருந்த போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதுவுமே செய்யவில்லை.
தலைமை நீதிபதி சாலே அபாஸை மாமன்னர் விலக்க விரும்பிய போது மகாதீர் கைகள் கட்டப்பட்டிருந்தன. அவரது பிள்ளைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அவை பொருளாதாரப் பாடப் புத்தகங்களில் வெறும் குத்தகைகள் எனக் குறிக்கப்படும்.
அந்த பையன்களில் யாரும் புதிய பொருள் எதனையும் விற்பனைக்கு அனுப்பவுமில்லை. எந்த புதிய நவீனத் தொழில் நுட்பத்தையும் கண்டு பிடிக்கவில்லை. அவர்கள் பாதை ‘அரசாங்கம் இல்லாமால் செல்வந்தர்களானதாகும்’.அவர்களுடைய தந்தைக்கு அதில் பங்கு இல்லை. அவர்கள் அவ்வளவு திறமையானவர்கள்.
அவர் சட்டத்தைப் பின்பற்றி நாட்டைப் பாதுகாக்க விரும்பியதால் அவர் அப்போதைய தமது துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை தயக்கத்துடன் நீக்கினார். அடையாளக் கார்டு திட்டம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
தமக்கு கார் தொழில், விமான நிறுவனத் தொழில் அல்லது அந்நியச் செலாவணி வர்த்தகம் பற்றித் தெரியாது என அவர் சொன்னால் அவர் உண்மையானவர் என நாம் நம்பவேண்டும். அப்படி என்றால் நாட்டுக்கு எப்படி பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது ?
எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு மலேசியக் குடிமக்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், மக்களுடைய உணர்வுகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவருடைய ஆணவமான நடத்தையிலிருந்து நாம் அதனை நம்பலாம்.
அபசலோம்: டாக்டர் மகாதீர் அவர்களே நீதியும் உண்மையும் ஒரு நாள் உங்களை பிடித்துக் கொள்ளும். உங்கள் விஷயத்தில் அது 20 ஆண்டுகள் தாமதமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
அன்வார் உங்களுக்குச் செய்த அநீதிகளை நீங்கள் சொல்கின்றீர்கள், ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பொதுவாக மலேசியர்களுக்கும் நீங்கள் செய்துள்ள அநீதிகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
உங்கள் தவறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் நீங்கள் அதிகாரத்தில் இல்லாத வேளையிலும் மலேசியர்கள் இன்னும் விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அவற்றை அனவைரும் அறிவர். அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை)
பாவி: 1998ம் ஆண்டு நீங்கள் அன்வாரை ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஜெயிலுக்குள் அடைத்ததால் அவருடைய மனைவியும் புதல்வியும் அரசியலுக்கு வந்தார்கள். அன்வார் உங்களைப் பற்றியும் சேவகர்களைப் பற்றியும் அம்பலப்படுத்துவதைத் தடுக்க நீங்கள் அதனைச் செய்தீர்கள். மறந்து விட வேண்டாம்.
அன்வாருக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்யவும் அன்வார் எழுப்பும் ஒவ்வொரு பிரதிவாதத்தையும் விசாரணை நீதிபதி பொருத்தமற்றது என அறிவிப்பதை உறுதி செய்யவும் நீதிமன்றங்களில் உங்கள் நண்பர்களைப் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
தே தாரேக்: 1990களில் அவர் தமது புதல்வர் மிர்ஸானைக் காப்பாற்றியதை மறந்து விட வேண்டாம். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமது புதல்வருடைய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைக் காப்பாற்ற அவர் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட் பெட்ரோனாஸ் பணத்தைப் பயன்படுத்தினார்.
அவர் தமது அரசியல் வாழ்க்கை முழுவதும் தமது சேவகர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்மை அளித்த பல கோணலான ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் பிஎன் ஆதரவாளர்: மகாதீர் அவர்களே யாரை முட்டாளாக்கப் பார்க்கின்றீர்கள் ? நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்தாலும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த டெண்டர் வழியாக கிடைத்தால் தவிர பெட்ரோனாஸ் குத்தகைகளில் சம்பந்தப்படவே கூடாது.
உங்கள் புதல்வர்களுக்கு அந்தக் குத்தகைகளைக் கொடுக்குமாறு நீங்கள் பிரதமராக இருந்த போது கேட்கவில்லை என்றாலும் பெட்ரோனாஸுக்கும் மற்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் பொறுப்பாக இருக்கின்றவர்கள் நிச்சயம் தெரியும்- நீங்கள் அவர்களை நீக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது. அதனால் அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள்.
விஜய்47: உங்கள் பிள்ளைகளுக்கு பெட்ரோனாஸ் ஒப்பந்தங்களும் மற்ற சகாயங்களும் கிடைப்பதற்கு உதவி செய்யவில்லை என நீங்கள் சொல்வது ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகள் ஜோடித்த பொய்க் குற்றச்சாட்டுக்கள் மூலம் எழுந்த தவறான எண்ணங்களாகவும் அவை இருக்கலாம்.
நீங்களும் உங்கள் தோழர்களும் உங்கள் பிள்ளைகளுடைய வெற்றி குறித்து பெருமை கொள்ளலாம். உங்கள் புதல்வரும் லிங் லியாங் சிக் புதல்வரும் இப்போது பில்லியனார்கள். எஸ் சாமிவேலுவின் புதல்வர் மில்லியனார். அவர்களுடைய கடின உழைப்பும் ‘daddy’cation-னும் அதற்குக் காரணம் என்றால் தவறே இல்லை.