‘மாற்றரசுக் கட்சிகளில் பிகேஆர்தான் பெரிய கட்சியாக இருக்கும், டிஏபி அல்ல’

1dapஎதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமானால் எதிர்தரப்பில் மிகப் பெரிய கட்சியாக பிகேஆர்தான் இருக்கும் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப் பகுதித் தலைவர் டோனி புவா.

பக்காத்தான் ரக்யாட்டில் டிஏபிதான் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மறுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1dap1டிஏபி 40-50 நாடாளுமன்ற இடங்களில்தான் போட்டியிடுவதாக புவா தெரிவித்தார்.

பிகேஆர் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதைத் தெரிவிக்காமலேயே அதுதான் மிகப் பெரிய மாற்றரசுக்கட்சியாக திகழும் என்றாரவர்.

“நாங்கள் எப்படி பக்காத்தானில் மிகப் பெரிய கட்சியாக முடியும்?”, என்று வினவி ஆசிய வியூக, தலைமைத்துவக் கழக(அஸ்லி)த்தின்  தலைமை செயல் அதிகாரி மைக்கல் இயோ பக்காத்தானில் டிஏபி பெரிய கட்சியாக விளங்கும் என்று கூறியிருந்ததை மறுத்தார் புவா.

“பாஸ் அல்லது பிகேஆர் அதிகமான இடங்களைப் பெறலாம். அது பிகேஆராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்”, என்றார்.

இயோ, எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் 99 இடங்களையும் பிஎன் 123 இடங்களையும் பெறும் என ஆருடம் கூறியுள்ளார்.

 

TAGS: