‘அம்னோ அந்த ஆட்டத்தை முடிந்த அளவுக்கு விளையாடி விட்டது. அதன் விளைவுகளை அனைவரும் எதிர்நோக்க வேண்டும்’
தவணைக்காலம் முடிகிறது, பினாங்கு பக்காத்தான் கரங்களில் தொடர்ந்து இருக்குமா ?
கொகிட்டோ எர்கோ சம்: வெற்றிகரமாக பக்காத்தான் ராக்யாட்டுக்கு அளிக்கும் வாக்கு மலாய் அதிகாரம் இழக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என்னும் எண்ணத்தை பிஎன் ஒரளவுக்கு ஏற்படுத்தி விட்டது.
அதனை முறியடிக்க வேண்டும். ஆனால் பிஎன் தேர்தல் எந்திரம் மிகப் பெரியது. அதில் மோசடிகளும் திரைமறைவு நடவடிக்கைகளும் அடங்கும். அதனால் பிஎன் -னை சமாளிப்பது மிகச் சிரமம்.
ஸ்விபெண்டர்: சுதந்திரம், சமநிலை, நீதி, நியாயம், பொறுப்புணர்வு, வெளிப்படையான தூய்மையான அரசாங்கம் ஆகிய அனைத்துலகப் பண்புகளுக்கு மேலாக இனமும் சமயமுமே எல்லாம் எனக் கருதப்பட்டால் நாடு தொடர்ந்து வீழ்ச்சி காணும். நாம் தோல்வி கண்ட நாடாக மாறுவது திண்ணம்.
அம்னோ/பிஎன் 55 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் முறைகேடான நிர்வாகம், அதிகார அத்துமீறல், ஊழல் ஆகியவை காரணமாக நாடு வீழ்ச்சி அடைந்து விட்டது என்ற உண்மையைக் கண்டு பிடிக்கவும் நம்மில் சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அரிஸ் மொக்லாஸ்: இது தான் அரசியல். உள்ளூர் மக்களுடைய எண்ணத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டால் கூட விளைவுகளில் தாக்கம் ஏற்படும். அது தார்மீக ரீதியில் சரியா இல்லையா என்பது முக்கியமல்ல.
நமது பின்னணி எப்படி இருந்தாலும் மலேசியர்கள் என நாம் நம்மை அழைத்துக் கொள்ளக் கூடிய முதிர்ச்சி அடைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு இன்னும் வெகு காலம் பிடிக்கும். வாக்காளர்கள் என்ற முறையில் நாம் அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சபாக்காரன்: நியாயமான தெளிவான சிந்தனை கொண்ட பிரஜைகள் பக்காத்தானுக்கு வாக்களிப்பார்கள். கடந்த காலத்தில் எழுதப்படிக்கத் தெரியாத தகவல் அறியாத குடி மக்கள் ஏழைகளாக இருந்ததால் தங்கள் வாக்குகளை விற்றதால் அம்னோ/பிஎன் -னுக்கு வாக்குகள் கிடைத்தன.
ஆனால் இப்போது சூழ்நிலை மாறிக் கொண்டிருக்கிறது. அம்னோ/பிஎன் ஜோடிக்கும் பொய்கள் இணையத்தின் வழி எளிதாகத் தெரிந்து விடுகின்றது. பினாங்கு தொடர்ந்து பக்காத்தான் வசம் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தர வைப்புத் தொகை மாநிலம் எனச் சொல்வது வாக்காளர்களுடைய விவேகத்தை அவமானப்படுத்துவதாகும்.
பெண்டர்: சிலாங்கூர் மக்கள் ஏன் கிளந்தான், கெடா மக்களைப் போன்று தங்கள் மாநிலத்தை பிஎன் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏனெனில் பிஎன் குறித்த அனுபவம் அவர்களுக்கு நிறைய உள்ளது.
அந்தப் பிரச்னைகள் பிஎன் -னுக்கு ஆதரவாக மாற வாக்காளர்கள் விடக் கூடாது. தகராறுகள் பக்காத்தான் முகாமில் மட்டும் நிகழவில்லை.
பிஎன் தரப்பிலும் தகராறுகள் நிலவுகின்றன. ஆனால் அந்தத் தகராறுகளைச் சிறிதாகக் காட்டுவதற்கு பிஎன்-னிடம் பிரச்சார எந்திரங்கள் இருப்பதை மறக்க வேண்டாம்.
ஆனால் அதே எந்திரங்கள், பக்காத்தானில் தோன்றும் சிறிய பிரச்னையைக் கூட ஊதி ஊதி பொது மக்கள் முன்னிலையில் பெரிதாக்கி விடும்.
அஸ்வாத்தமா1: டிஏபி ‘சீன அம்னோ’ ஆகும். மலாய் தொகுதிகளை அம்னோ வெல்வது நிச்சயம். அதே போன்று சீன இடங்களை டிஏபி பிடிப்பது உறுதி. சீனர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க டிஏபி என்ன வேண்டுமானாலும் செய்யும்.
உங்கள் அடிச்சுவட்டில்: உண்மையில் அது சாபக் கேடு. இறுதியில் எல்லாம் இன அடிப்படைக்கு வந்து விடுகின்றது. ஒவ்வொரு இனமும் எப்படி வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகின்றது. அம்னோ அந்த ஆட்டத்தை முடிந்த அளவுக்கு விளையாடி விட்டது. அதன் விளைவுகளை அனைவரும் எதிர்நோக்க வேண்டும்.
இதனிடையே நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகள்- மலாய்காரர், சீனர், இந்தியர், கடாஸான்கள், டயாக்குகள் ஆகிய அனைவருடைய வாழ்வாதாரங்களைப் பாதிக்கின்றவை- பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
நல்ல நாள்: பக்காத்தான் ஆட்சிக் காலத்தில் நல்ல ஆளுமை நிகழ்ந்துள்ளது. அதனால் தேர்தல் மோசடி நிகழ்ந்தாலும் பக்காத்தான் இரண்டாவது தவணைக் காலத்துக்கு தெரிவு செய்யப்படும்.
முதலமைச்சர் லிம் குவான் எங் அனைத்து மக்களிடமும் சாதாரணமாக பழகும் மனிதர் ஆவார். பக்காத்தான் ஆளுமையில் மாநிலம் சிறப்பாக இயங்க முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.