“விவேகக் கைத்தொலைபேசிகள் 13வது பொதுத் தேர்தலுக்கு பேராபத்து”

phonesசாதாரண விவேகக் கைத்தொலைபேசிகளும் அவற்றின் சாதரணமான பயன்பாடுகளும் அதிகாரிகள் தயாராக இல்லா விட்டால் 13வது பொதுத் தேர்தலில் சிரமத்தை ஏற்படுத்தலாம் என மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கருதுகிறார்.

“வரும் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் விவேகக் கைத் தொலைபேசிகளுடைய வலிமை மீது கவனம் செலுத்தா விட்டால் தேர்தல் சுமூகமாக இருக்காது,” என வலைப்பதிவாளரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ காதிர் யாசின் கூறினார்.

மாறி வரும் சூழலில் ஊடகங்கள் வரும் பொதுத் தேர்தலை எதிர்நோக்குவது மீது இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் பேசினார்.

“நீங்கள் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக இல்லாவிட்டால் 13வது பொதுத் தேர்தல் சிக்கலானதாக இருக்கும். விவேகக் கைத்தொலைபேசிகளை நீங்கள் தடை செய்யாவிட்டால் பிரச்னைகள் எழக் கூடும்,” என அவர் வாதாடினார்.

எல்லா வகையான வதந்திகளும் உரையாடல்களும், பொய்யான செய்திகளும் அந்தக் கைத்தொலைபேசிகள் வழி எளிதாகப் பரப்பப்பட்டு நெருக்கடி ஏற்பட்டால் வாக்களிக்க வருவோர் எண்ணிக்கை குறையக் கூடும் என்றும் காதிர் குறிப்பிட்டார்..

 

TAGS: