நியூயார்க்: டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர். அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார்.
சீனாவில் தயாராக உள்ள டைட்டானிக்-2 கப்பல் வரும் 2016-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணத்தை தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போல அமைந்துள்ள இந்த புதிய கப்பலில், பாதுகாப்பு அம்சங்களில் நவீனமும், சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.