பூச்சோங்கில் புதிய மின்சுடலை; மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!

c3பூச்சோங் மயானத்தில் பல ஆண்டுகளாக இருந்த தகனம் செய்யும் வழிமுறைக்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஒரு புதிய மின்சுடலையின் வழி தீர்வு கண்டுள்ளது.

இன்று அந்த மின்சுடலையின் வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் அஸ்மாவி பின் கஸ்பி விளக்கமளித்தார்.

2011 ஆண்டு திட்டமிடப்பட்டு சுமார் 12 லட்சம் வெள்ளி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மின்சுடலை இரண்டு தகனம் செய்யும் இயந்திரங்களை கொண்டுள்ளதாகவும் அது முழுமையான வகையில் சுகாதாரமானதாகவும் தூய்மைக்கேடு குறீடுகளுக்கு உட்பட்டவகையிலும் அமைந்துள்ளதாக கூறினார்.

c1இந்த மின்சுடலையை சுபாங் நகராண்மைக்கழகமே நிர்வகிக்கும் என்றும் அதற்கான நான்கு பணியாளர்கள் பயிற்சியில் உள்ளதாகவும், நீர் மற்றும் மின்சாரம் போன்றவை சில நாட்களில் இணைக்கப்படும் என்றும் அஸ்மாவி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான ரோனி லியு மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மின்சுடலை வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு தயாராகும் என்கிறார் இதனை அமைக்க முன்னோடியாக இருந்த சுபாங் நகராண்மைக் கழக உறுப்பினர் கா. ஆறுமுகம்.

“மின்சுடலை என்பது உள்ளூர் ஆட்சி சட்டம் 1976 விதி 94- இன் கீழ் உள்ளது. அதன்படி அதை அமைப்பது ஒவ்வொரு நகராண்மைக் கழகத்தின் கடமையாகும்” என்று கூறிய ஆறுமுகம், இதை அமைக்க 2009-இல் நிதி ஒதுக்கீடு கேட்டபோது, அது ஒரு போரட்டமாகவே வெளிப்பட்டது என்றார்.

c22010-இன் நகராண்மைக் கழக வரவு-செலவு தாக்கலின் போது காரசாரமான விவாதம் ஏற்பட்டதாகவும், அப்போதிருந்த சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் அட்னான் அவர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து தனது நகராண்மைக் கழக உறுப்பினர் பதவியை ராஜனமா செய்துவிட்டு, இது சார்பாக மக்களுடன் இணந்து போரடுவேன் என்ற சாவாலுடன் தானும் வெளியேறியதாக கூறுகிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர் சேவியர் ஜெயகுமார், சிலாங்கூர் மாநிலத்தின் இடுகாட்டுப் பிரச்னையை தீர்க்க 400 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.

மக்கள் கூட்டணி அரசின் மற்றுமொரு சாதனை இந்த மின்சுடலையாகும் என்றவர், “மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கையின் பலன்களில் இதுவும் ஒன்று என்றார்.

பொதுமக்களின் வசதிக்காக மேலும் சில மின்சுடலைகளை அமைக்க மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய டாக்டர் சேவியர், ஒரு தகனத்திற்கு 180 வெள்ளி கட்டணமாக அறவிடப்படும்; வசதி குறைந்தவர்கள் இந்த மின்சுடலையை இலவசமாக பயன்படுத்திக் கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

TAGS: