இந்து உரிமைக் குழு தன்னை புதிய மஇகா என எண்ணுகிறது

waytha“எல்லா மஇகா இடங்களிலும் ஹிண்ட்ராப் போட்டியிட விரும்புவதாக வேதமூர்த்தி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆகவே அது மஇகா அஸ்தமானதும் பிஎன் -னில் சேர வேண்டும்”

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் ‘மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது’

பெர்ட் தான்: வேதமூர்த்தி அவர்களே, பக்காத்தான் அண்மையில் வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கை குறித்து நீங்கள் ஏமாற்றம் அடைந்தால் பிஎன் -னுடன் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது ?

பக்காத்தான் என்ன செய்தாலும் அதனை ஏன் நீங்கள் திரும்பத் திரும்பக் குறைகூறுகின்றீர்கள் ? ஆனால் இன்று வரை பிஎன் நடவடிக்கைகள் (ஏதும் இருந்தால்) வேதமூர்த்தி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை ?

பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான் மீது ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் ? காலம் கடக்க கடக்க ஒரு விஷயம் தெளிவாகிக் கொண்டிருக்கிறது. புத்ராஜெயாவைக் கைப்பற்றும் பக்காத்தான் முயற்சிகளை  முறியடிப்பதற்கு அது பாடுபடுவதாகத் தோன்றுகிறது.

ஹிண்ட்ராப் பிஎன் -னுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது அது பயனற்றதாகி விடும். பிஎன் -னுக்கு அது பயனில்லாமல் போய் விடும்.

முன்னாள் பாஸ் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலிக்கும் முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசாவுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தீர்களா ? அவர்கள் விரும்பத்தகாதவர்களாகி விட்டனர்.

அது இந்தியர் உரிமைகளுக்குப் போராடுவது சம்பந்தப்பட்டதல்ல. ஹிண்ட்ராப் தலைவர்களுக்கான அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியிலும் (இப்போது பாஸ் வசம்) ஸ்ரீ அண்டலாஸ்

(பிகேஆர் வசம்) தொகுதியிலும் போட்டியிடும் முதலாவது ஹிண்ட்ராப் வேட்பாளராக தாம் இருக்கப் போவதாக மனித உரிமைக் கட்சியின் தலைவர் பி உதயகுமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஆகவே வேதமூர்த்தி அவர்களே, உண்மையாகச் சொல்லுங்கள். வரும் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் அல்லது தொகுதிகளில் நிற்கப் போகின்றீர்கள் ?

அன்ஸ்பின்: ஹிண்ட்ராப் பக்காத்தான் நிலையில் தன்னை வைத்து சிந்திக்க வேண்டும். பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை இன அடிப்படையில் இருந்தால் அது நடப்பு ஆட்சியின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டதாக இருக்காது.

அதனால் தான் நல்ல சிந்தனை கொண்ட மலேசியர்கள் இன அடிப்படைக்குப் பதில் தேவை அடிப்படையில் அமைந்த பக்கத்தான் கொள்கைகளை பாராட்டுகின்றனர்.

2008ல் அது பெரிய சக்தியாக திகழ்ந்ததற்கு பெரிய போராட்டத்தில் அது நம்பிக்கை வைத்திருந்ததாகும். கடந்த சில வாரங்கள், ஹிண்ட்ராப், பக்காத்தான் எதிர்ப்பாளராக நடந்து கொள்வதையே காட்டியுள்ளன.

பிஎன் ‘நன்றாக நடந்து கொள்வதற்கும்’ மக்கள் வரிப்பணத்தை கொடுப்பதற்கும் ( அதனால் பல இந்தியர்களும் மலேசியர்களும் நன்மை அடைந்துள்ளனர்) காரணம் பக்காத்தான் ஏற்படுத்தி விட்ட வலுவான எதிர்ப்பு காரணமாகும்.

நமது எதிர்காலத் தலைமுறைகளின் நன்மைக்காக நாம் இந்த இரண்டு கட்சி முறையைத் தொடர வேண்டும்.

மஹாஷித்லா: வேதமூர்த்தி, பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை இன எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன என்பதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ?

“ஏழை இந்தியர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய பிரச்னைகளை அலட்சியம் செய்வதற்கு அவர்கள் அதனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளனர்” என நீங்கள் கூறியதில் “அந்த அவர்கள்’ யார் என்பதை விளக்குங்கள். ஏனெனில் பக்காத்தான் இன்னும் கூட்டரசு அரசாங்கமாகவில்லை.

ஒன்று நீங்கள் இனவாத கால கட்டத்தில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது பிஎன் வழங்கும் காரட் சாறு நிராகரிக்க முடியாத அளவுக்கு இனிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் தொடக்கத்தில் போராடிய ஒதுக்கப்பட்ட இந்தியர்களைப் புறக்கணித்து விட்டு வெகுமதிகளுக்காக காத்திருப்பது போலத் தெரிகிறது.

நம்பாதவன்: புதிய மஇகா-வாக ஹிண்ட்ராப் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. எல்லா மஇகா இடங்களிலும் ஹிண்ட்ராப் போட்டியிட விரும்புவதாக வேதமூர்த்தி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆகவே அது மஇகா அஸ்தமானதும் பிஎன் -னில் சேர வேண்டும்.

இனவாத எதிர்ப்பாளன்: பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை பக்காத்தானுடைய உண்மையான நிறத்தை காட்டி விட்டது. அம்னோவைப் போன்றே அதுவும் இந்தியர்களை நடத்துகிறது.

அன்வார் அம்னோ நிர்வாகத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார். அவரிடமிருந்து நீங்கள் வேறு எதனை எதிர்பார்க்க முடியும் ?

பக்காத்தான் தோல்வி அடைந்ததும் ‘பல இனவாதம்’ எனத் தான் அழைத்துக் கொள்ளும் கொள்கையில் மூழ்கட்டும். பின்னர் ஹிண்ட்ராப் 14வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் போது ஹிண்ட்ராப்  பக்காத்தானுடன் பேச்சுக்களை நடத்தலாம்.

தூயே: ஹிண்ட்ராப் கோரிக்கைகள் யாருக்கும் உதவுவதாகத் தெரியவில்லை. அது தனது நிலையை மற்றவர்கள்  மீது திணிக்க விரும்புகிறது. ஹிண்ட்ராப்பைக் காட்டிலும் ஏழை இந்தியர்களுக்கு மஇகா அதிகம் உழைப்பதாகத் தோன்றுகிறது.

ஏழை இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் போராடுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக அதிகாரத்தை நாடும் சந்தர்ப்பவாதிகளுக்கான மேடையாகவே அது தெரிகிரது.

 

TAGS: