ஹிண்ட்ராப் கேட்பது விளக்கங்கள் அல்ல, உரிமைக்கான உறுதிமொழி

-என். கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப், மார்ச் 1, 2013.

hindraf1இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வுகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்டத்தை எழுத்து பூர்வமாக ஆதரித்தால் பக்கதானுடன் இணைந்து ஆட்சி  மாற்றத்திற்கான வேலைகளை முடுக்கி விடலாம் என்று ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வலியுறுத்தியும், தங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களை முற்றிலும் புறக்கணித்து இருக்கும் பக்கத்தான்  செயல் கண்டு  அதிர்ச்சி ஏற்படுகிறதா?

ஹிண்ட்ராப் – பக்கத்தான்  அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி  வெற்றியடையும் சாத்தியங்கள் ஒரு வேலை ஏற்ப்பட்டாலும்  அது  100 விழுக்காடு வெற்றியடையும் என்று நாங்கள்  எண்ணியதில்லை. வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த பின்னர் இந்தியர்கள் ஏமாற்றப் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் எழுத்து பூர்வமான ஒப்புதலுக்கு பக்கத்தானை ஹிண்ட்ராப் வலியுறுத்தி வந்தது. ஆனால்  தேர்தலுக்கு முன்னரே  வெட்ட வெளிச்சத்தில் , நம் கண் முன்னரே  இந்தியர்களை தங்களின் கொள்கை அறிக்கையில் பக்கத்தான் கூட்டணி அரசியல்வாதிகள் ஒளிவு மறைவு இல்லாமல் ஏமாற்றுவார்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னேற இந்தியர்களுக்கு பாகத்தான் அரசியல் தலைவர்கள் கை விரித்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

நேற்று ம.சீ.ச துணைத் தலைவருடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த PKR  தேர்தல் கேந்திர இயக்குனர் ரப்பிசீ  பாக்கத்தான் தேர்தல் அறிக்கை அனைத்து  மலேசியர்களுக்கும் உருவாக்கப் பட்டது , இந்தியர்களுக்காக மட்டும் அல்ல” என்று குறிப்பிட்டதாக மலேசியாகினி இணயதள ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அவரின் வாதம் வெறும்  குப்பை. அதில் முதிர்ச்சியோ, இந்தியர்களின் நெடு நாளைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற ஈடுபாடோ கொஞ்சமும் இல்லை.

இந்தியர்களை  தொடர்ந்து எமற்றியத்தின்   விளைவு கடந்த 2008ஆம் ஆண்டு  1hind ganesan பொதுத்தேர்தலில்  ஹிண்ட்ராப் சுனாமியாகி மாறி பக்கத்தானுக்கு ஆதரவாக  செயல்பட்டது.  அப்படி இருந்தும் அந்த தேர்தலுக்கு பின்னர் மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவோ, அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை பற்றி  பேசுவதற்கோ ஒரு நாளில் கூட ஹிண்ட்ராப் அமைப்புடன் பேச்சு வார்த்தையில் பக்கத்தான் தலைவர்கள் ஈடுபட்டதில்லை. அவர்களின் இந்த போக்கு இந்தியர்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்திருந்தோம். எதிர்பார்த்ததைப் போலவே இந்தியர்களையும் , நம் பிரச்சனைகளையும் துச்சமாக எண்ணிய அவர்களின் மனநிலையின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை.

அவர்களின் செயலின் பின்னால் இருக்கும் சூழ்சியை நம்மால் நன்றாக உணர முடிகிறது. பக்கத்தானுக்கு வேண்டியது எல்லாம் இந்தியர்களின் வாக்குகள்  மட்டுமே தவிர இந்தியர்களின் பிரச்சனைகள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலும் , சட்ட மன்ற கூட்டத்திலும் அவர்கள் இருக்க வேண்டும் அவ்வளவுதான் அவர்களின் கடமை உணர்ச்சி. உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளை அவர்கள் அங்கே அனுமதிக்கப் போவதில்லை. ஹிண்ட்ராப் போன்ற இயக்கங்கள் வீதிகளில் போராடி போலிசாரின் அடிதடிகளுக்கும் , சிறைவாசத்திற்கும் மட்டும்தான் தேவை. அதனால்தான் தொடர்ந்து அழுத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டிருங்கள் ஆட்சியில் பங்கு கேட்காதீர்கள், நாடாளுமன்றத்திற்கு  வராதீர்கள் வெளியில் இருந்தே போராடுங்கள் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். நீங்கள் முதலில் இந்தியர்களின் வாக்குகளை எங்களுக்கு போட சொல்லுங்கள்,   வென்றதும் உங்களுக்கு நாங்கள் ஏதாவது பார்த்து கொடுக்கிறோம் என்று ஹிண்ட்ராப் அமைப்பை விலைக்கு வாங்க பார்த்தார்கள், பார்க்கிறார்கள். அதற்கு ஹிண்ட்ராப் ஒருபோதும் அடிபணியாது.

எல்லோரையும் நம்பி நம் சமூகம் பட்டது போதும். நமக்கு வேண்டியது நம் உரிமைக்கான உறுதி மொழி !

TAGS: