“மலேசியா பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுதுவது என்ற பெயரில் மொரோ தேசிய விடுதலை முன்னணிக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுத்து வருகின்றது.”
லஹாட் டத்து தாக்குதல் ‘உள்நாட்டுப் போராக’ விரிவடையலாம்
பெர்ட் தான்: லஹாட் டத்து சம்பவம் ‘உள்நாட்டு’ போராக மாறலாம் என மொரோ தேசிய விடுதலை முன்னணி அரசியல் தலைவர் காபுல் ஹாஜிரு எச்சரித்துள்ளார். (அவர்கள் குடிமக்களாக இருந்தால் அது சரியானது)
சபாவில் உள்ள 8,500 பிலிப்பினோக்களில் பெரும்பாலோர் தாவ்சுக்-குகள் என்றும் அவர்கள் தீவிரப் போக்குடைய மோரோ இன உறுப்பினர்கள் என்றும் பிலிப்பின்ஸ் ஸ்டார் நாளேடு குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் “வாக்குகளுக்கு குடியுரிமை” திட்டத்தின் கீழ் நன்மை அடைந்தவர்களா ?
சபா மீது சுலு சுல்தானுக்கு எந்த சட்டப்பூர்வமான கோரிக்கையும் இல்லை. ஆனால் இங்கு அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமில்லை.
ஆனால் சுலு ஊடுருவல்காரர்கள் ஏன் இங்கு வந்தார்கள் ? வந்த நேரமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. வரும் பொதுத் தேர்தல் காரணமாக அவர்கள் அரசாங்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினரா ?
அது தற்கொலை நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். சபா மீதான தங்கள் கோரிக்கையை வலியுறுத்த அவர்கள் எண்ணியிருக்கலாம். மறக்கப்பட்டு விட்ட தங்கள் கோரிக்கையை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்வது அவர்கள் நோக்கமாக இருக்கலாம்.
அவர்கள் மலேசிய அரசாங்கத்தை மாநாட்டு மேசைக்குக் கொண்டு வர முடியும் என நம்பியிருக்க வேண்டும். நமது அரசாங்கம் அந்தப் பாதையைத் தேர்வு செய்யும் அளவுக்குப் பலவீனமானது அல்ல என நான் நம்புகிறேன்.
பிலிப்பின்ஸ் அரசாங்கம் சபா மீதான எந்தக் கோரிக்கைக்கும் ஆதரவு அளிக்காததால் அந்தக் கோரிக்கை ஒரு விவகாரமே அல்ல.
குவிக்னோபாண்ட்: புத்ராஜெயா இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்:
1) அந்த சுலு துப்பாக்கிக்காரர்கள் எப்படி நமது எல்லைக்குள் ஊடுருவினர் ?
2) அந்த இரு மின்னற்படை வீரர்களும் எப்படி உயிரிழந்தனர் ? அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை என்ன ? அவர்களுடைய நடவடிக்கையின் வியூகம் என்ன ? அவர்கள் எங்கு இருந்தார்கள் ? அவர்களுக்கு உத்தரவிட்டது யார் ?
3) ஏன் அந்த இழுபறி இவ்வளவு நாட்களுக்கு நீடித்தது ? அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட சுலு மக்களுடைய வாக்குகள் கிடைக்காமல் போகக் கூடும் என பிஎன் அஞ்சுவதற்கும் அதற்கும் தொடர்பு உண்டா ?
4) சபாவில் வன்முறைகள் தொடராமல் இருப்பதற்கு அரசாங்கம் ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதா ?
லாவ் கோக் கோக்: இது தான் மலேசியாவின் கர்ம வினை. மலேசியா பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுதுவது என்ற பெயரில் மொரோ தேசிய விடுதலை முன்னணிக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுத்து வருகின்றது.
கிறிஸ்துவர்களை அடிப்படையாகக் கொண்ட பிபிஎஸ் கட்சியைத் தோற்கடிக்க மகாதீர் மலேசிய நீல நிற அடையாளக் கார்டுகளை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கினார். அம்னோ செய்த பாவத்துக்கு இப்போது நிரபராதிகளான சட்டத்தைப் பின்பற்றும் மலேசியர்கள் விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சில கடற்கொள்ளக்காரர்களிடமிருந்து கூட நாட்டைக் காப்பாற்ற முடியாத அம்னோ/பிஎன் -னை நாம் நம்ப முடியாது.
சுக்கோய் ஜெட் விமானங்கள், போலந்தில் தயரிக்கப்பட்ட டாங்கிகள், ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள், பீரங்கி ஹெலிகாப்டர்கள் எல்லாம் எங்கே போயின ? அந்த சிறிய ஊடுருவல் மீது நாம் ஏன் இரண்டு துணிச்சலான மலேசியர்களை தியாகம் செய்ய வேண்டும் ?