மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து மேலும் அதிகமான அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர்.
செம்பொர்ணாவுக்கும் லஹாட் டத்து-வுக்கும் இடையில் உள்ள குனாக் நகரத்தில் இரண்டு கிராமங்களில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார். கடந்த இரண்டு நாட்களாக அவ்விரு பகுதிகளிலும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
குனாக்கிற்கு அருகில் உள்ள கம்போங் லோர்மாலோங், கம்போங் டாசார் லாம ஆகியவற்றில் குறைந்தது 10 ஊடுருவல்காரர்களைக் கண்டதாக நேற்றிரவு பின்னேரத்தில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
“அங்கு பத்து பேர் கொண்ட கும்பல் தென்பட்டது. அவர்களில் மூவர் கம்போங் தண்டுவோவில் ஊடுருவியர்களைப் போன்று இராணுவச் சீருடைகளை அணிந்திருந்தனர்.”
இஸ்மாயில் லஹாட் டத்துவில் நிருபர்களிடம் பேசினார்.
அந்தப் பகுதியில் தென்பட்ட கும்பலைக் கட்டுப்படுத்துவதற்குப் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்றும் அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.