இயல்புநிலைக்குத் திரும்பத் தடுமாறுகிறது லாஹாட் டத்து

1lahat

அதன் கடற்கரைப் பகுதிகளில் சூலு அரச இராணுவம் ஊடுருவல் செய்ததால் நிலைகுலைந்துபோன லாஹாட் டத்து வழக்கநிலைக்குத் திரும்பத் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

1lahat1130கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் தண்டுவோவில் 17-நாள்களுக்குமுன் வந்திறங்கிய ஊடுருவல்காரர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததை அடுத்து சாரிசாரியாக இராணுவ ஊர்திகள் வரத் தொடங்கியதைக் கண்டு அமைதியான அந்நகரம் ஆடிப் போனது.

போலீஸ், இராணுவ அதிகாரிகள் பலர், காயமுற்ற பாதுகாப்புப் படையினர் சிகிச்சை பெற்றுவரும் அந்நகரின் மருத்துவ மனையில் குழுமியிருந்தார்கள். போலீஸ் ஹெலிகாப்டர்கள் அந்நகரின் விமான நிலையத்தை ஒரு தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

பதற்றநிலை இப்போது சற்றுக் குறைந்திருந்தாலும் நகரின் குடியிருப்பாளர்களிடம் இன்னும் நடுக்கம் குறையவில்லை.

1lahat kedaiஇராணுவ-போலீஸ் வருகையின்போது மூடப்பட்ட கடைகளில் சில மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கடைகள் குறிப்பாக சிறிய கடைகள் இன்னும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

“எல்லோரும் பயந்து போயுள்ளனர், அதனால்தான் கடை திறக்கவில்லை”, என்று பாக் கூ தே உணவக உரிமையாளர் ஒருவர் கூறினார். வியாபாரத்துக்குத் திறந்துள்ள ஒருசில கடைகளில் அவருடையதும் ஒன்று.

தம் பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர், வியாபாரம் கெட்டுபோகக் கூடாதே என்று கடையைத் திறந்ததாகக் கூறினார்.

“பக்கத்துக் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். விஐபி-கள் எல்லாம் அங்கு போய்ச் சாப்பிடுகிறார்கள். ஏதாவது நடக்கப்போகிறதென்றால் அவர்களுக்குத் தெரியாதா என்ன. அதனால்,பயப்பட வேண்டியதில்லை என்று நினைத்தேன்”, என்றார்.

ஆனால், கடையை முன்கூட்டியே அடைத்துவிடுவதை ஒப்புக்கொண்டார்.

“இப்போதெல்லாம் மிகச் சிலர்தான் இரவில் நடமாடுகிறார்கள். வியாபாரம் வழக்கம்போல் நடப்பதில்லை. 40விழுக்காடு குறைந்துவிட்டது”,என்றார்.

1lahat heliஇன்னொரு குடியிருப்பாளர் தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இதேபோல் ஆயுதம் தாங்கிய பிலிப்பினோ கும்பல் ஒன்று ஒரு நகருக்குள் ஊருவியதை நினைவுகூர்ந்தார்.

அங்குள்ள தவுசாக் சமூகத்தவர் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் சாத்தியம் உண்டா என்று கேட்டதற்கு: “அப்படி எதுவும் நடக்காது”,என்று உறுதியாகக் கூறினார்.

“இங்குள்ளவர்கள் நல்லாத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லையைத் தாண்டி வருபவர்கள்தான் தொல்லை கொடுக்கிறார்கள்”.

இராணுவம் இப்போது பண்டார் செண்ட்ராவாசேயில் 

1lahat hospitalலாஹாட் டத்து மருத்துமனை சென்று பார்த்தபோது மூன்று போலீஸ் அதிகாரிகள்தான் அங்கிருந்தனர்.

விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்பி இருப்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்றாலும், போலீஸ் ஹெலிகாப்டர்களும் அங்கு வரப்போக இருக்கின்றன.

இராணுவம் இப்போது கம்போங் தண்டுவோவுக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டார் செண்ட்ராவாசேயில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது.

1lahat lastபண்டார் செண்ட்ராவாசேயில் உள்ள பெல்டா கல்லூரியில் ஒரு டஜனுக்குமேல் இராணுவ ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

பெல்டா சஹாபாட் செம்பனைத் தோட்டத்தில் அமைந்திருந்தாலும் ஒரு பெரிய நகரில் காணக்கூடிய வசதிகள் எல்லாம் அங்குள்ளன. ஒரு போலீஸ் நிலையமும் உள்ளது.

செய்தியாளர் கூட்டங்கள், பண்டார் செண்ட்ராவாசேயிலிருது 10கிலோ மீட்டர் தொலைவிலும் கம்போங் தண்டுவோவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுமுள்ள பண்டார் சஹாபாட்டில் நடத்தப்படுகின்றன, அது ஒரு ஓய்வுத்தலமாகும்.