சூலு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை ஆமை வேகத்தில் நடப்பதாக கீர் தோயோ சாடல்

1mohd khir

முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோ, லாஹாட் டத்துவில் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகாண அரசாங்கம் நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதைச் சாடியுள்ளார்.

லாஹாட் டத்துவுக்குள் அடக்கி வைத்திருக்கப்பட வேண்டிய ஊடுருவல் இப்போது அக்கம்பக்கப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது.

1mohd khir1“ஆயுதம் தாங்கிய உள்நாட்டு வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்  சம்பந்தப்பட்ட நெருக்கடிகள் பல. ஜப்பானிய செஞ்சேனை படையினர் 1975-இல் ஏஐஏ கட்டிடத்தைப் பிடித்துக்கொண்ட சம்பவம், மெமாலி சம்பவம், சவுக் சம்பவம் இப்படி பலவற்றைக் கண்டிருக்கிறோம்.

“ஒரு மாதமாகியும் இந்த (லாஹாட் டத்து) நெருக்கடிக்குத் தீர்வு காணப்படவில்லை. அதை நினைத்துத்தான் மக்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

“லாஹாட் டத்துவிலிருந்து அது இப்போது செம்பூர்னாவுக்கும் பரவியுள்ளது. மற்ற கடலோர மாவட்டங்களுக்கும் அது பரவினால்கூட வியப்படைவதற்கில்லை”, என்று முன்னாள் மந்திரி புசார் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதத்தை கீர் மட்டும் குறைகூறவில்லை வேறு சில முன்னாள் தலைவர்களும் குறைகூறியுள்ளனர். நேற்றிரவு முன்னாள் பிரதமர் டாக்டர் ,மகாதிர் முகம்மட், அச்சம்பவத்தை உள்நாட்டு மிரட்டல் என அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டு விட்டது என்றார்.

1mohd khir2 அங்குள்ள நிலவரம் மோசமடைந்து ஒன்பது போலீஸ் அதிகாரிகளின் உயிரையும் காவு கொண்டிருப்பது குறித்து கீர் வருத்தம் தெரிவித்தார். அரசாங்கம் அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னது. ஆனால், நடந்திருப்பது வேறு என்றார்.

“ஒரு வாரத்துக்குள் ஏழு போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மிகுந்த வருத்தம் தருகிறது.

“அரசாங்கம், இதை ஒரு பாதுகாப்பு விவகாரமாகக் கருதி முன்னுரிமை கொடுப்பது  மட்டும் போதாது, அரசாங்கத்தால் இவ்விவகாரத்தைச் சமாளிக்க முடியும் என்ற  நம்பிக்கையைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதும் முக்கியமாகும்”, என்றார்.

அரசாங்கம் இனியும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் சொல்லும்போது சில போலீஸ்காரர்கள் சுடப்பட்ட செய்தியும் கூடவே வருகிறது என்று கீர் குறிப்பிட்டார்.

அவ்விவகாரத்தைக் கையாள தேசிய பாதுகாப்பு மன்றம் ஒன்றை அமைக்கலாம் என்றும் அவர் அலோசனை கூறினார்.