லிக்காஸ் தேர்தல் முடிவுகள் செல்லாது என நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் 9ஏ பிரிவு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசமைப்புக்கு உட்பட்டதா என வழக்குரைஞர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியலின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப முடியுமா முடியாதா என்பதும் ஒர் அரசமைப்பு கேள்வி என்றும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறினார்.
“நான் ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் அந்தத் திருத்தம் அரசமைப்புக்கு ஏற்ப உள்ளதா என சந்தேகம் கொள்கிறேன்,” என அவர் 13வது பொதுத் தேர்தல் பற்றி நடத்தப்படும் அனைத்துலகக் ஆய்வரங்கு ஒன்றில் கூறினார்.
1999ம் ஆண்டு சபா லிக்காஸ் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தபட்ட வாக்காளர் பட்டியல் குளறுபடியானது என்றும் அதனால் அந்தத் தேர்தல் முடிவுகள் செல்லாது என்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்த பின்னர் அரசாங்கம் 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் அந்தத் திருத்தத்தைச் சேர்த்தது.
வாக்காளர் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இறுதியானது என்றும் அதனால் எந்த வகையான நீதித் துறை மறு ஆய்விலிருந்தும் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் பிரிவு 9ஏ குறிப்பிடுகின்றது.