‘எட்டு மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விளக்குங்கள். அவர்களும் முஸ்லிம்கள் தான்’
லஹாட் டத்து நிலவரத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதை டாக்டர் மகாதீர் ஒப்புக் கொள்கிறார்
பிராமன்: “அதனால் தான் நாங்கள் முதலில் கவனமாகச் செயல்பட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் முஸ்லிம்கள், நாமும் முஸ்லிம்கள். நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தீய நோக்கத்துடன் செயல்பட்டு நமது போலீஸ்காரர்களில் இருவரைச் சுட்டுக் கொன்றனர்.”
இதனை வேறு வகையாகச் சொன்னால் அவர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டால் போலீசார் உடனே துப்பாக்கிகளை பயன்படுத்தியிருப்பார்கள்.
நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் சமயம் என்பது ஒர் அம்சமாகவே இருக்கக் கூடாது.
ஊடுருவியவர்கள் மலேசியர்கள் அல்ல. அவர்கள் முறையான வழிகளில் வராமல் சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களிடம் ஆயுதங்களும் உள்ளன. அவர்களுடைய இனம் அல்லது சமயம் எதுவாக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க அது மட்டும் போதுமானது.
மகாதீர் போன்ற அதிகாரத்தில் உள்ள மக்கள் சமயத்தையும் இனத்தையும் பயன்படுத்தி வந்துள்ளதால் எட்டு மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விளக்குங்கள். அவர்களும் முஸ்லிம்கள் தான்.
உடைந்த கால்: 200 பேர் இராணுவ உடையுடன், முழு ஆயுதங்களுடன் கம்போங் தண்டுவோ-வில் தரை இறங்கியுள்ளனர். சபா தங்கள் பிரதேசம் என்ற தங்கள் கோரிக்கையை பிரகடனம் செய்வது அவர்களுடைய நோக்கமாகும். அதற்காக அவர்கள் மடியவும் தயாராக இருந்தனர்.
அது ஆயுதமேந்திய படையெடுப்பு என எந்த நியாயமான மனிதரும் முடிவு செய்வார். ஒரு வேளை அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வேண்டுமானால் படையெடுப்பாளர்களுடைய இராணுவப் பொருட்களை பிக்னிக் கூடையாக எண்ணியிருக்கலாம்.
தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இன்னொரு முஸ்லிம் நிலம் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை சிறுவர்கள் போல நடத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெரும்பாலும் அற்ப காரணங்களுக்காக முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களைக் கொன்றுள்ளதை வரலாறு காட்டியுள்ளது. இது உண்மையில் சிக்கலான விஷயமாகும்.
நீங்கள் செய்தாலும் தவறு, செய்யாவிட்டாலும் தவறு. எதிர்காலத்தில் எந்த ஊடுருவலும் முழு படைபலத்துடன் ஒடுக்கப்படும் என்பதை உணர்த்துவதற்கு நாம் அந்த ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும்.
தாம் பிரதமராக இருப்பதாக எண்ணிக் கொண்டு மகாதீர் அறிக்கை விடுக்கிறார். நஜிப் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகையை வழங்குவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார். நமது பிரதேசம் முற்றுகையிடப்பட்டுள்ளது பற்றிச் சிந்திக்க அவருக்கு நேரம் இல்லை.
பீரங்கி: அந்த ஊடுருவல்காரரர்களினால் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களுடைய குடும்பங்களிடமும் நாட்டுமக்களிடமும் ஊடுருவல் காரணமாக இடம் பெயர்ந்த கிராமவாசிகள், மீனவர்கள் ஆகியோரிடமும் நெருக்கடி நீடிப்பதால் வாழ்வதாரத்தை இழந்துள்ள மக்களிடமும் மகாதீர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நமது நாட்டின் பிரதேச இறையாண்மையைத் தற்காக்கத் தவறியதற்காகவும் சபா மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும் பிரதமர், உள்துறை அமைச்சர், தற்காப்பு அமைச்சர் ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதோடு பதவி துறக்கவும் வேண்டும்.
ஆயுதங்களுடன் நமது பிரதேசத்தின் மீது படையெடுத்த அந்த வன்முறை கிரிமினல்களை ‘தீவிரவாதிகளும் அல்ல, பயங்கரவாதிகளும் அல்ல’ என்பது போல நடத்தியது பெரும் தவறாகும். அந்தத் தவறினால் நமது போலீஸ் அதிகாரிகள் உயிரிழக்க நேரிட்டது.
உண்மை நிலையை மறைக்கும் வேலை இன்னும் தொடருகின்றது. வழக்க நிலை திரும்பி விட்டதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் பிரகடனம் செய்கிறார், அது எப்படி முடியும் ?
இன்னும் ஆயுதமேந்திய 200 பேர் பிடிக்கப்படவில்லை. அவர்கள் லஹாட் டத்துவில் பதுங்கியுள்ளனர். மற்ற இடங்களில் ஆயுதமேந்திய கும்பல்கள் இன்னும் பிடிபடவில்லை. கிராமவாசிகள் தங்கள் பண்ணைகளுக்கும் வீடுகளுக்கும் திரும்ப முடியவில்லை.
பூஜாங் சென்னாங்: மகாதீர் அவர்களே, அவர்கள் மற்ற சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தால் தொடக்கத்திலேயே அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்போம் எனச் சொல்ல வருகின்றீர்களா ? ஏன் சமயத்தையும் இனத்தையும் கொண்டு வருகின்றீர்கள் ? அவர்கள் ஊடுருவல்காரர்கள் என்றால் ஊடுருவல்காரரர்கள் தான்.
அவர்களுக்கு சபாவில் குடும்பங்களும் நண்பர்களும் இருப்பதால் அரசாங்கம் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை என மகாதீர் சொல்கிறார். சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் அம்னோவுக்கு வாக்களிப்பதற்கு உதவியாக அவர்களுக்கு குடியுரிமை கொடுத்தது யார் ?
அடையாளம் இல்லாதவன்#02382443: மகாதீர் இன்னும் தாம் பொறுப்பில் இருப்பதைப் போலப் பேசுகிறார்.
அவர் என்ன சொன்னாலும் பிலிப்பினோக்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்க அனுமதித்த பழியிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அதனால் பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. நம்மிடையே யார் எதிரி யார் நண்பர் என நீங்கள் எப்படி அடையாளம் காணப் போகின்றீர்கள் ?
பொறுப்பானவர்: ஊடுருவல்காரர்கள் வெளி மருட்டல் என முடிவு செய்ய நமது அரசாங்கத்துக்கு ஏன் இவ்வளவு காலம் பிடித்தது ? சபாவில் உள்ள ‘அந்நியர்கள்’ புதிதாக பெற்ற அடையாளக் கார்டுகளுடன் நன்றாக மலாய் மொழியைப் பேசுவதால் நம்மிடையே சுதந்திரமாக நடமாடுவது காரணமா ?