‘செம்போர்ணா பாதுகாப்பாக உள்ளது, நேற்றிரவு துப்பாக்கிச் சூடுகள் ஏதும் இல்லை’

sempகடலோரத்தில் உள்ள செம்போர்ணா நகரத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சொல்லப்படுவதை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பிராடுஸ் அப்துல்லா நிராகரித்துள்ளார்.

அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.

“நாங்கள் விசாரித்தோம். கூறப்படுவது போலத் துப்பாக்கிக் சூடுகள் ஏதுமில்லை,” என்றார் அவர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் மட்டும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. அதில் ஆறு அந்நிய ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர் என அவர் சொன்னார்.

“சீனப் புத்தாண்டு முடிந்து வெகு நாட்களாகி விட்டது. அதனால் யாரும் பட்டாசுகளை வெடித்திருக்கவும் முடியாது,” என்றும் பிராடுஸ் தெரிவித்தார்.

நேற்றிரவு 9 மணி வாக்கில் நகரத்துக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சில செம்போர்ணா மக்கள் கூறினர்.semp1

பல பத்திரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் நிர்வாகம், விருந்தினர்கள் தங்கள் அறைக்குள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. வரவேற்புப் பகுதியில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன.

விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, ஹோட்டல் மூடப்பட்டுள்ளது என்ற தோற்றத்தைத் தருவது அதன் நோக்கமாகும்.

சிப்பாடான் தீவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் தங்கிச் செல்வதற்கான மய்யமாக செம்போர்ணா, இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றது. அரச சுலு இராணுவம் என தங்களை அழைத்துக் கொண்டவர்களுடன் ஞாயிற்றுக் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

என்றாலும் சந்தைக் கூடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு பல கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இன்று காலை 6 மணி தொடக்கம் அவர் போலீஸ் காரில் பயணம் செய்து ஒலிபெருக்கி மூலம் செம்போர்ணா பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அதனால் கடைகளைத் திறக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

“பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் போலீசார் தொடர்ந்து அந்த நகரத்தில் காவல் சுற்றுப் பணிகளை மேற்கொள்வர்,” என்றும் அவர் உறுதி அளித்தார்.