சுலு சுல்தான் தன்மூப்பாக மலேசியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்

suluசுலு சுல்தான் எனத் தம்மை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் இன்று தன்மூப்பாக சண்டை நிறுத்தத்தைப் பிரகடனம் செய்துள்ளார்.

மலேசியாவுக்குள் ஊடுருவிய அவரது ஆதரவாளர்களை மலேசியத் துருப்புக்கள் தொடர்ந்து வேட்டையாடும் வேளையில் அவர் அந்த அறிவிப்பை செய்துள்ளார்.

சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஊடுருவலைத் தொடர்ந்து நிகழ்ந்த மோதல்களில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று பிற்பகல் மணி 12.30 முதல் தன்மூப்பான சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதாக ஜமாலுல் கிராம் சொன்னார்.

மலேசியா எதிர்ந்நோக்கும் கடுமையான பாதுகாப்பு நெருக்கடிக்கு அமைதித் தீர்வு காணப்பட வேண்டும் என ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்த பின்னர் ஜமாலுல் கிராமின் அறிவிப்பு  வெளியாகியுள்ளது.sulu1

சபாவில் நெருக்கடி உருவாகியுள்ள பகுதிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் மலேசியாவும் பதிலுக்கு சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என ஜமாலுலுடைய பேச்சாளர் மணிலாவில் வாசித்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

“அவர்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பார்கள் அவர்கள் தங்கள் நடவடிக்கையை விரிவு செய்ய மாட்டார்கள்,” என தீவிரவாதிகளைக் குறிப்பிட்ட அந்த அறிக்கை கூறியது. 100 முதல் 300 தீவிரவாதிகள் சபாவுக்குள் ஊடுருவியிருப்பதாக நம்பப்படுகின்றது.

-ஏஎப்பி