பிரதமர் அவர்களே, சபாவை தீடீர் பிரஜைகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்

PM‘ஆம் நாம் சபாவை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு என்பது நமக்கு தெரியாமல் அந்த மாநிலம் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும்.’

சபா மலேசியாவில் என்றென்றும் இருக்கும் என நஜிப் பிரகடனம்

மஹாஷித்லா: சபாவும் சரவாக்கும் நீண்ட காலத்துக்கு மலேசியாவில் இருக்கும். ஆனால் என்றென்றும் அல்ல.

புத்ராஜெயா அவற்றை சமமாக நடத்தி அவற்றின் மக்களுக்கு மரியாதை கொடுத்து மேம்பாட்டில் நியாயமான பங்கை அளித்தால்  அவை நீண்ட காலத்துக்கு இணைந்திருக்கும்.

அவற்றை நிரந்தர வைப்புத் தொகைகளாகக் கருதி எழும்புத் துண்டுகளை மட்டும் வீசி அவற்றை ஏழ்மையிலும் பின் தங்கிய நிலையிலும் வைத்திருந்தால் மக்கள் எழுச்சி அடைய வெகு நேரமாகாது.

சபா நிலைமை மிகவும் மாறுபட்டது. ஏனெனில் அதன் மக்களில் கணிசமான பகுதியினர் பிலிப்பின்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அந்தத் திடீர் குடிமக்களுடைய அடுத்த தலைமுறையினர் சபாவை ‘சூடான பகுதியாகி’ மாற்றி விடக் கூடும். அப்போது நிலைமை தென் தாய்லாந்தை விட மோசமாக இருக்கக் கூடும்.

ஸ்டார்ர்: சபாவைத் தற்காப்பது பற்றிப் பேசுவதற்கு முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த ஊடுருவல்காரர்கள் எப்படி யார் கண்ணிலும் படாமல் நமது கரைக்குள் நுழைந்தனர் என்பதை விளக்க வேண்டும்.

ஆயுதங்களை வைத்திருந்த 200 முதல் 300 பேர் எப்படி எளிதாக ஊடுருவி கம்போங் தண்டுவோ-வில் இராணுவத் தளத்தை அமைத்தனர் ?

“அதற்கு முன்னதாக தவாவ் நகரில் சுலு சமூகத்தைச் சந்தித்ததாகவும் மலேசியாவுக்கு அவர்கள் விசுவாசம் தெரிவித்ததாகவும் நஜிப் சொல்கிறார்.”

அந்த விசுவாச உறுதி மொழிக்கு என்ன அவசியம் ஏற்பட்டது ? ‘நீரைக் காட்டிலும் ரத்தம் கனமானது’ எனச் சொல்வார்கள். அத்தகைய வாக்குறுதி வெறும் ‘தண்ணீரா’ ?

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் நிறைந்துள்ள சபா கிழக்குக் கடலோரத்தில் “சிறப்பு பாதுகாப்புப் பகுதிகளை” அமைத்திருப்பது சரியான நடவடிக்கை ஆகும். அதனை ஏற்கனவே செய்திருக்க வேண்டும். கூடுதல் பட்டாளங்களையும் அங்கு அனுப்ப வேண்டும்.

அத்துடன் சட்டவிரோதக் குடியேற்றக்காரர் எண்ணிக்கையைக் குறைக்க கூட்டரசு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மைகார்டுகளை ரத்துச் செய்து சம்பந்தப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.

நியாயமானவர்: அந்த புனிதமான நிலையை எடுத்துள்ள நமது பிரதமருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். நம்மிடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டு விசுவாசம் அவற்றுக்கு மேலாக கருதப்படும் போது தான் உண்மையான முதிர்ச்சியைப் பார்க்க முடியும்.

உங்கள் அடிச்சுவட்டில்:  ஆம் நாம் சபாவை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு என்பது நமக்கு தெரியாமல் அந்த மாநிலம் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும். நாம் கவனமாக இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் மலேசியா முழுவதும் திருடப்பட்டு விடும்.

Tonsommansabi: சபா இப்போது எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு அம்னோ தலைவர்கள் கள்ளக் குடியேறிகளுக்கு அடையாளக் கார்டுகளைக் கொடுத்து அவர்கள் திடீர் பிரஜைகளாகவும் வாக்காளர்களாகவும் மாற்றியதுதான் காரணமாகும்.

ஜோசப் பைரின் கிட்டிங்கான், பெர்னார்ட் டொம்போக், ஜோசப் குருப் போன்ற கடாஸான், டுசுன், முருட் தலைவர்கள் ஆளும் பிஎன் கூட்டணியிலிருந்து தங்கள் கட்சிகளை மீட்டுக் கொள்வதின் மூலம் அம்னோ தலைமையிலான அரசாங்கத்திடம் வலுவாக ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்.

2 Tim 1:7: அம்னோ அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்காக பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா ஆகியவற்றைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான முஸ்லிம் குடியேற்றக்காரர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டு வாக்காளர்களாக மாற்றப்படுவதற்கு வழி வகுத்த மகாதீர் திட்டமே உள்ளுக்குள் எதிரியை உருவாக்கி விட்டது.

லஹாட் டத்து போன்ற நெருக்கடி அவ்வப்போது மூளும் என்றே நான் எண்ணுகிறேன். எப்படியாவது அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற தனது பேராசையால் அமைதியாக இருந்த சபாவில் கீழறுப்புச் சக்திகளை அம்னோ விதைத்து விட்டது. அந்த சக்திகள் ஆயுதப்படைகளுக்கும்  போலீசுக்கும் சவால் விடுக்கும்.

என்ன காரணம்: நிச்சயமாகக் கருத வேண்டாம். அரசியலில் எதுவும் 100 விழுக்காடு உறுதி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மலேசியாவில் சேர வாக்களித்தார்கள். அவர்கள் விரும்பினால் வெளியேறவும் வாக்களிக்கக் கூடும்.

நடப்பு சபா மக்களில் பலர் சுதேசிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது ஆத்திரமடைந்துள்ள பிலிப்பின்ஸ் குடியேற்றக்காரர்கள் அவர்கள்.

டெலிஸ்டாய்: ஆம், நமது வீரரே. அந்தப் பயங்கரவாதிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியதற்குப் பதில் முதல் நாளேன்றே நீங்கள் உங்கள் வலிமையைக் காட்டியிருக்க வேண்டும்.

அவர்கள் முஸ்லிம் சகோதரர்கள் என்பதால் நீங்கள் அவர்களிடம் வெளியேறுமாறு மன்றாடினீர்கள்.

இறையாண்மை என வரும் போது முஸ்லிம் சகோதரத்துவமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமரசம் ஏதும் இருக்கக் கூடாது.

மலேசியா ஏபியூ: ஆயுதமேந்திய ஊடுருவல், பயங்கரவாதம் ஆகியவற்றிடமிருந்து நாம் என்ன விலைகொடுத்தாவது சபாவைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அத்துடன் நின்று விடக் கூடாது.

போலி வாக்காளர்கள், போலி குடிமக்கள், பேராசை பிடித்த ஊழல் அரசியல்வாதிகள் ஆகியோரிடமிருந்தும் அதனைக் காப்பாற்ற வேண்டும். சபா, சரவாக், மலாயா ஆகியவை செய்து கொண்ட 1963 கூட்டரசு ஒப்பந்தத்தை மதிக்காமல் அதன் செல்வத்தை உறிஞ்சும் கூட்டரசு அரசியல்வாதிகளிடமிருந்தும் சபாவைக் காப்பாற்ற வேண்டும்.

 

TAGS: