பாலாவின் 2வது சத்திய பிரமாணத்தை ஆராய வழக்குரைஞர்கள் வலியுறுத்து

1bala14 வழக்குரைஞர்கள்  எதிர்வரும் வழக்குரைஞர் ஆண்டுக்கூட்டத்தில் ஒரு குழுவை அமைத்து தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் (எஸ்டி) செய்த சூழலை ஆராய வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

வான் ஹிதாயாதி நடிரா வான் அஹ்மட் நசிரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் நேற்று வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. வழக்குரைஞர் மன்றத்தின் ஆண்டுக்கூட்டம் மார்ச் 16 நடக்கிறது.

மார்ச் 1-இலும், 4-இலும் பாலசுப்ரமணியம் செய்த அவ்விரு எஸ்டிகளின் உள்ளடக்கம் குறித்து வழக்குரைஞர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.

“எஸ்டி சம்பந்தப்பட்ட விவரங்கள் இணையத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டு சாங்கோபாங்கமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன.

“பாலாவும் தீபக் (ஜெகிஷன்)-கும் சொல்வது உண்மையாயின் 2வது எஸ்டி- தயாரிக்கப்பட்ட விவகாரம் ஒரு குற்றச்செயலாகும். அது தவறான தகவல் கொடுத்ததற்காகவும் நீதி கிடைப்பதைத் தடுத்தற்காகவும் குற்றவியல் சட்டம் XI ஆம் பகுதியின்கீழ் தண்டிக்கத்தக்க குற்றமாகும்.

“மேலும், எஸ்டி 1-ஐ மீட்டுக்கொள்ள பாலாவைக் கட்டாயப்படுத்தியவர்களின் செயல் அதிகார அத்துமீறல் என்பதுடன் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) சட்டம் 2009-இன்படி தண்டிக்கத்தக்கதுமாகும்”, என்றந்த தீர்ம்னாம் கூறுகிறது.

தனியார் துப்பறிவாளர் தம் முதலாவது எஸ்டி-இல் மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவி கொலை தொடர்பில் தெரிவித்துள்ள தகவல்களையும் அத்திர்மானம் விவரிக்கிறது.

முதலில் செய்த எஸ்டியை மறுதலித்து இரண்டாவதாக செய்த எஸ்டி, கட்டாயத்துக்கு இணங்கிச் செய்ததாகும் எனவும் பாலா கூறிக்கொண்டிருக்கிறார்.

பாலா கூறுவது உண்மைதான் என்று கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் கடந்த டிசம்பரில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் உறுதிப்படுத்தினார்.

“அந்த வகையில், இதில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் கிரிமினல் குற்றம் புரிந்தவர்களாக அல்லது குற்றச்செயல் நடக்க உடந்தையாக இருந்துள்ளனர்.

“அப்படிச் செய்ததன்வழி வழக்குரைஞர் தொழிலுக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளனர்”என்றது கூறுகிறது.

அத்தீர்மானம் Loyar Burok வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TAGS: