சரணடைய மறுக்கும் ஜமாலுல், பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறார்

kiramசுலு சுல்தான் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராம், நிபந்தனையின்றி சரணடையுமாறு கோலாலம்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு மாறாக பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார்.

சபாவில் தற்போது மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் நான்கு மலேசியப் போலீஸ் அதிகாரிகளைப் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டுள்ளார். ஆனால் மலேசியப் போலீசார் அதனை மறுத்துள்ளனர்.

சண்டை நிறுத்தம் செய்ய தாம் முன் வந்ததை கோலாலம்பூர் நிராகரித்து விட்டதை அறிந்த ஜமாலுல் ‘பகைமை நடவடிக்கைகளை’ நிறுத்திக் கொள்வதற்கு மாற்று யோசனையை வழங்கினார். ஆனால் அந்த யோசனையும் சபாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை மலேசியப் பாதுகாப்புப் படைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அதே வேண்டுகோளைக் கொண்டதாகும்.kiram1

அந்த விவரங்களை பிலிப்பின்ஸ் நாளேடான  Inquirer இன்று வெளியிட்டுள்ளது.

பகைமை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள மலேசியா ஒப்புக் கொண்டால் “போர்க் கைதிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ள” தயாராக இருப்பதாக சுல்தான் சொன்னார்.

சனிக்கிழமை இரவு செம்போர்ணாவில் உள்ள சிமுனுல் கிராமத்தில் போலீஸ் நிலையம் ஒன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஜமாலுல் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் தலைமையிலான ஆயுதமேந்திய குழு நான்கு மலேசியப் போலீஸ் அதிகாரிகளை பிடித்ததாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

kiram2கடந்த வெள்ளிக் கிழமை கம்போங் தண்டுவோ-வில் நிகழ்ந்த சண்டையின் போது அஸ்ஸிமுடி கும்பலைச் சேர்ந்த 10 பேரை மலேசியப் படைகள் சிறைப் பிடித்துள்ளன.

தீவிரவாதிகள் நான்கு மலேசிய போலீஸ் அதிகாரிகளைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுவதை மலேசிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கைதிகள் பரிவர்த்தனைக்கான நிபந்தனைகள் ஐநா, மலேசியா, சுலு சுல்தான் ஆட்சி ஆகியவற்றுக்கு இடையில் பிலிப்பின்ஸ் அரசாங்கத்தின் ‘இடைத்தரகுடன்’ ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என சுல்தானுடைய பேச்சாளர் அப்ராஹாம் இட்ஜிராணி கூறினார்.

சுலு ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற கோலாலம்பூர் கோரிக்கையை அவரும் நிராகரித்தார்.

“சரணடைவதால் விரிவான அமைதி ஏற்படாது,”என அவர் சொன்னதாக அந்த பிலிப்பின்ஸ் நாளேடு கூறியது.