சபா லஹாட் டத்துவில் நிகழ்ந்துள்ள ஆயுதமேந்திய ஊடுருவலுடன் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை இணைக்கும் செய்திகள் குறிப்பாக அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி அன்வாரை அரசியல் ரீதியில் கொல்லும் நோக்கத்தை கொண்டது என அவரது வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.
“முதலாவது பிரதிவாதியான உத்துசான் அம்னோவுக்கு சொந்தமானதாகும். அந்தக் கட்சி வாதியான அன்வாருக்கு அரசியல் எதிரியாகும். அன்வாரது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்கு அது எண்ணம் கொண்டுள்ளது,” என இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் உத்துசானுக்கும் டிவி3க்கும் எதிராக அன்வார் வழக்குரைஞர்கள் சமர்பித்த கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தன்னை ‘சுலு சுல்தான் அரச இராணுவம்’ என அழைத்துக் கொண்ட ஒரு பிரிவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய நபர்கள் சபாவில் மேற்கொண்ட ஊடுருவலுக்கும் அன்வாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் செய்திகளை அந்த இரண்டு ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
அன்வாரை வழக்குரைஞர்களான என் சுரேந்திரனும் லத்தீப்பா கோயாவும் பிரதிநிதித்தார்கள்.