போர் விமானங்கள் பறக்கக் காணப்பட்டதன் பின்னர் புதிய வெடிப்பொலிகள்

1foodலாஹாட் டத்து கிராமவாசிகள் புதிதாக வெடிப்பொலிகளைக் கேட்டதாகவும் அதே வேளை போர் விமாங்கள் ஒப்ஸ் டவுலாட் பகுதியை நோக்கிப் பறப்பதைக் கண்டதாகவும் கூறிக்கொள்கின்றனர்.

1food1“கம்போங் தண்டுவோவை நோக்கி மூன்று ஜெட் விமானங்கள் பறந்து சென்றதைக் கண்டோம். அதன்பின் காலைமணி 7.30 அளவில் எட்டு வெடிப்பொலிகளைக் கேட்டோம்”, என பைகைல் மெஹெலி படல் (வலம்) , 56 , எம்பாடா புடியில் கூறினார்.

பாதுகாப்புப் படைகள் செவ்வாய்க்கிழமை கம்போங் தண்டுவோ, தஞ்சோங் பத்து பகுதிகளில் தொடங்கிய தாக்குதலை தஞ்சோங் லாபியான் பகுதிகளுக்கு விரிவுபடுத்தியிருப்பதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.

இன்னொரு கிராமவாசி,  அலி ஜொஹான்,  32, தாம் குறைந்தது  இரண்டு  வெடிப்பொலிகளைக் கேட்டதாகத் தெரிவித்தார்.

“தண்ணீரைக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பலத்த வெடிச்சத்தத்தைக் கேட்டேன்”, என்றார்..

எம்பாடா புடி தஞ்சோங் லாபியானிலிருந்து  10 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது.

ஆனால், தஞ்சோங் லாபியானுக்குச் செல்லும் சாலையில்  போலீஸ் சாவடி ஒன்றில்  இருக்கும் போலீசார் தங்களுக்கு எதுவும் கேட்கவில்லை என்றனர்.

விமானத் தாக்குதல் பற்றி நேற்று விளக்கிய ஆயுதப்படைத்  தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின், அது எதிரிகளைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல என்றும் பாதுகாப்புப் படைகள் உள்ளே செல்வதற்குப் பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கிக் கொடுப்பதுதான் அதன் நோக்கம் என்றும் கூறினார்.

உணவுக்குப் பஞ்சமில்லை

1food2இதனிடையே, எம்பாடா புடியிலிருந்து வெளியேறிய கிராமவாசிகள், முதலில் போதுமான உணவில்லை என்று முறையிட்டாலும் இப்போது உணவு நிறைய கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

“முதலில் சில பிரச்னைகள் இருந்தன. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை உணவுப் பொட்டலங்கள் தருகிறார்கள்.

“நாங்கள் 650 பேருக்குமேல் இருக்கிறோம். இருந்தாலும் உணவு மீதமாகி விடுகிறது”, என்று பைகைல் தெரிவித்தார்.

மலேசிய சிவில் தற்காப்புத் துறை அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது.

இதனிடையே தேசா கெஞ்சானாவிலும் ஊடக மையம் அமைந்துள்ள பெல்டா சஹாபாட்டைச் சுற்றிலும்முள்ள கிராமங்களிலும் தண்ணீருக்குத்தான் அவ்வப்போது பிரச்னை வந்து விடுகிறது.

நேற்று நண்பகலில் அங்கு தண்ணீர் கிடைத்தது. இரவில் நிறுத்தப்பட்டது. காலையில் மீண்டும் திறந்து விடப்பட்டது.

முக்கிய நீர்த் தேக்கம் சிவப்பு மண்டலப்பகுதியில் உள்ளதால், தொழிலாளர்கள் இரவில் அங்கு வேலை செய்ய பயப்படுகிறார்கள்.

நேற்று தொடங்கிய தண்ணீர் தட்டுப்பாட்டால் ஊடக மையமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தண்ணீர் தாங்கிகள் காலியாகக் கிடக்கின்றன.