சுலு இளவரசி: அஸ்ஸிமுடி ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்

princessசுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் ‘பாதுகாப்பாக’ இருப்பதாக அந்த சுல்தானுடைய புதல்வி இளவரசி ஜேசல் கிராம் கூறுகிறார்.

அஸ்ஸிமுடி தமது சகோதரர்களில் ஒருவருடன் இன்று அதிகாலையில் தொலைபேசி வழி பேசியதாகவும் தாமும் தமது பிரிவினரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

மலேசியாவின் ‘கூடின பட்ச வன்முறைகளினால்’ பெண்களும் பிள்ளைகளும் உட்பட பல சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

தமது தந்தை அறிவித்த தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரித்த ஒரு நாளைக்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு அனைத்துலக அமைப்புக்கள் தலையிட வேண்டும் என்ற தமது குடும்பத்தின் வேண்டுகோளை ஜேசல் கிராம் மீண்டும் வலியுறுத்தினார்.

சபாவில் உள்ள பிலிப்பினோக்களை பாதுகாக்குமாறும் அவர் அதிபர் பெனிக்னோ அக்கினோவையும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே புதன் இரவு நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்ட ‘ஜெனரல்’, அஸ்ஸிமுடி அல்ல  என மலேசிய தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அந்தச் சடலம் அஸ்ஸிமுடி-உடையது அல்ல. அவர்களுடைய தலைவர்களில் ஒருவரது சடலம்,” என அவர் பெல்டா சஹாபாட் இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.

-இண்டர்-அக்சன்