“அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்”
இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பான சதி எனக் கூறப்படுவதற்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும்
கிம் குவேக்: குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமைச் சிக்க வைப்பதற்கு சதித் திட்டத்தை வகுத்ததில் முக்கியப் பங்காற்றியவர் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறப்பு அதிகாரி கைரில் அன்னாஸ் ஜுசோ என அஸ்லாம் லாஜிம் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கைரில் அப்போதைய தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் ஆகியோருடைய ஒத்துழைப்பு இல்லாமல் அன்வாரை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றிருக்க முடியாது.
தமது மேலதிகாரி நஜிப்பின் ஆணை அல்லது ஒப்புதல் இல்லாமல் கைரில் அந்த துணிச்சலான சதித்திட்டத்தை நிறைவேற்றத் துணிந்திருப்பாரா ? பிரதமருடைய வேண்டுகோள் அல்லது ஒப்புதல் இல்லாமல் அத்தகைய திட்டத்தை மூசா ஹசானும் அப்துல் கனியும் தொடங்கியிருப்பார்களா ?
பிரதமர் உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கேட்டுக் கொண்டிருப்பது நியாயமானதே. உண்மையில் பிரதமருடைய பதிலுக்காக நாடு முழுவதும் காத்திருக்கிறது.
அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்.
கிங்பிஷர்: இந்த நாட்டில் அண்மையில் இது போன்ற கழிசடை அரசியல் வழக்கமாகி விட்டதையே அந்த முழு அத்தியாயமும் நமக்கு உணர்த்துகின்றன.
பிஎன் ஆட்சி மீது கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் உண்மையில் வெறுப்படைந்துள்ளனர். அதனால் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இது போன்ற தீய நடவடிக்கைகளில் சில சக்திகள் இறங்கக் கூடும்.
கெட்டிக்கார வாக்காளர்: வழக்கம் போல ‘சட்டம் முடிவு செய்யட்டும்’ என்பதே நஜிப்-பின் பதிலாக இருக்கும். அது ஒரு சதி என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய வளங்கள் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு அது ஒர் எடுத்துக்காட்டு ஆகும். சமூகத்தை ஏமாற்றுவதற்கு கொள்கைப் பிடிப்பு இல்லாத குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் அதனை எளிதாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஸ்டார்ர்: நஜிப் அதனை செவிமடுக்க மாட்டார். அவர் மன்னிப்பும் கேட்க மாட்டார். அது அவரது பாணி அல்ல.
இடோவி: தமது தந்தையை பிகேஆர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறி அவரைக் களங்கப்படுத்தியுள்ள கூறும் சைபுல் புஹாரி அஸ்லான் உண்மையில் தமக்கே அதிகமான பாதகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால் உண்மையில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். உயர்ந்த பதவியில் உள்ள மனிதர் அல்லது கறை படிந்த அரசியல்வாதி ஒருவர் சைபுலைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே அதுவாகும்.
அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கூடின பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
சிலாங்கூர் வாக்காளர்: சைபுலின் தந்தை “நம்ப முடியாதவர்” என நஜிப் சொல்லப் போகிறார். அது தான்அவருடைய வழக்கமான வசனம்.
அன்வார்: மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் எதுவும் மாறப் போவதில்லை
மாக்னுஸ்: “கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செய்து கொண்டுள்ள முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் செவிமடுப்பதற்கு சில மாதங்கள் இருக்கும் வேளையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அஸ்லானுக்கு அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.”
அன்வார் அந்த குதப்புணர்ச்சி குற்றச்சாட்டைப் புரியவில்லை என்பது மலேசியாவிலும் உலகிலும் பெரும்பாலோருக்கு தெரிந்துள்ள போது ஏன் முறையீடு செய்து கொள்ள சட்டத்துறைத் தலைவர் அனுமதித்தார் ?
இது என்ன ?: உண்மையில் இது மிகவும் வருத்தமளிக்கிறது. மலேசிய சமூகத்துக்கு வெட்கக்கேடான அந்த விஷயத்தை மீட்டுக் கொள்ள தந்தைக்கு எப்படி துணிச்சல் வந்தது ? தமது தந்தை மனம் மாறி விட்டார் என்பது எப்படி சைபுலுக்குத் தெரியாமல் போனது ?
யார் பாவம் செய்தவர்கள்- தந்தையா, மகனா அல்லது சில வாக்குகளுக்காக எந்த அளவுக்கும் தாழ்ந்து போகக் கூடிய அரசியல் தில்லுமுல்லுக்காரர்களா ?
ஏபியூ உறுப்பினர்: தந்தை கோரியுள்ள மன்னிப்பு நிச்சயம் பொது மக்கள் எண்ணத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தச் சந்தேகமே அன்வாருக்குச் சாதகமாக சூழ்நிலையை திருப்பி விடும்.
கறுப்பு சந்திரன்: ஏதோ குளறுபடி. பல ஆண்டுகளாக தமது புதல்வருக்கு ஆதரவாக இருந்த அஸ்லான் இப்போது ஏன் நேர்மாறாக மாற வேண்டும் ?
தமது நிலையை மாற்றிக் கொள்ளுமாறு அவர் அச்சுறுத்தப்பட்டாரா ? அல்லது பதிவு செய்யப்பட்ட செக்ஸ்
வீடியோ போன்று எதிலாவது சிக்கிக் கொண்டாரா ? அது வெளியிடப்பட்டால் அந்த முதியவருக்கு பெருத்த அவமானம் ஏற்படுமா ?
எல்லாம் சாத்தியமே ஆனால் குற்றவாளியைச் சுட்டிக் காட்டுவது சிரமமல்ல.
மோஹிகான்: அஸ்லான் லாஸிமுடைய மனச்சாட்சி அவரை உறுத்தியிருக்க வேண்டும். கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் எதிர்நோக்கிய சூழ்நிலைப் போன்றது தான் அது. நண்பர்களுடமும் உறவினர்களுடனும் குடும்பத்துடனும் பேசுவதற்கும் ஏன் உறங்குவதற்கும் கூட அவர் சிரமப்பட்டிருக்க வேண்டும்.