ஜயிஸ்-தேவாலயம்: சுல்தான் அறிக்கை மீது ஆயர் கவலை அடைந்துள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மய்யத்தில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை மதம் மாற்றியதாக கூறப்படுவது தொடர்பில் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை அறிக்கை மீது சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கை ” பல அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில்” அமைந்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.

“எதிர்காலத்தில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதை இப்போதைய நிலையைக் காட்டிலும் மேலும் சிரமமாக்கவில்லை”, என அவர் விளக்கினார்.

“நான் துவாங்குவின் மன்னிப்பை நாடுகிறேன். டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாக வலியுறுத்தப்படும் வேளையில் குற்றம் சாட்டப்படுவதற்குப் போதுமான ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்படுவது எப்படிச் சாத்தியமாகும்”, என அவர் வினவினார்.

மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அவர், அந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

“போதுமான ஆதாரம் இல்லை என்றால் தவறு நடந்திருப்பதாக கூறக் கூடாது – அது அவ்வளவு எளிதானது”, என மலேசிய கத்தோலிக்க ஆயர் மாநாட்டுத் தலைவருமான தான் சொன்னார்.

“இப்போதைய நிலைப்படி, அந்த விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு முஸ்லிம்களை மதம் மாற்றினர் என்னும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாத விடுதலை என்பதை சுல்தான் அறிக்கை காட்டுகிறது,” என அவர் வலியுறுத்தினார்.

“அதுவும் இல்லாமால் இதுவும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் அறிக்கை இல்லாமல் இருப்பதையே நான் விரும்புவேன்”, என அவர் குறிப்பிட்டார்.

தங்களது நோக்கங்களில் தோல்வி அடைந்து வருகின்றவர்கள் சார்பில் பெரிதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு கிறிஸ்துவர்கள் பொறுமையாக காத்திருந்தனர்”, என அந்த ஆயர் கூறினார்.

“பொதுத் தேர்தல் திண்ணமாகி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. கிறிஸ்துவர்களுக்கு எதிராக மறைமுகமாக குற்றச்சாட்டும் இந்த தீய பிரச்சாரம் ஒய்வதாகத் தெரியவில்லை. ஆகவே நச்சுத் தன்மை கொண்ட அந்த அவதூறுகளினால் ஒடுக்கப்படுவதிலிருந்து மீள்வதற்கு வாக்குப் பெட்டியே நமக்கு உள்ள ஒரே வழியாகும்”, என ஆயர் தான் முடித்தார்.

TAGS: