சிரியா உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளி போராளிகள்

Indian origin jihadi fightersடெல்லி: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளிப் போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியா நாட்டு போரில் இந்திய வம்சாவளி போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்த ஆசாத்தின் அரசியல் ஆலோசகர் ஷாபான் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். வரும் பிரிக்ஸ் மாநாட்டில் சிரியா பிரச்சனை குறித்த ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாட்டிற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்துப் பேசினார்.

சிரியாவில் இருக்கும் இந்திய போராளிகளில் பெரும்பாலானோர் இங்கிலாந்தில் இருந்து வருவதாக ஷாபான் தெரிவித்தார். சிரியா போர் குறித்து மேற்கத்திய நாடுகளின் கருத்து தவறானது. இந்த போரை சவூதி அரேபியாவின் உதவியோடு துருக்கி மற்றும் கத்தார் தான் தூண்டிவிட்டது என்று மேலும் தெரிவித்தார்.