“13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்”
லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக் காலம் முடிந்து விட்டது
ஸ்டார்ர்: பிரதமர் நஜிப் ரசாக்கின் தவணைக் காலம் முடிந்து விட்டது. முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவி 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மீண்டும் தேர்வு பெற்று ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட நாளிலிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகள் முடியவில்லை.
உண்மையாகச் சொன்னால் நஜிப் இப்போது பராமரிப்பு அரசாங்கத்துக்குப் பொறுப்பேற்றுள்ளார். அதனால் பல கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.
புதிய கொள்கைகளையும் செலவுகளையும் அறிவிப்பதற்கு முன்னர் அவர் இனிமேல் நாடாளுமன்றத்துடன் கலந்தாய்வு செய்ய வேண்டும். அவர் இனிமேல் அரசாங்கச் சொத்துக்களையும் வளங்களையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
பொது மக்களும் அந்நியப் பிரமுகர்களும் தவறாக வழி நடத்தப்படுவதைத் தவிர்க்க நஜிப் இனிமேல் “பராமரிப்பு அரசாங்கப் பிரதமர்” என்று தான் அழைக்கப்பட வேண்டும்.
டாக்: 13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நஜிப் எப்போது விசிலை ஊதலாம் என்பதற்காக தமது கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை.
அடையாளம் இல்லாதவன்_40f4: வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார். ஏப்ரல் 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அங்கு அறிவிக்கப்பட்டு விட்டது. துணை அதிபரை அதிபராக நியமிப்பது அரசமைப்புக்கு முரணானது, பொருத்தமற்றது என அந்த நாடு கருதுகிறது.
ஆனால் ‘எல்லாம் முடியும்’ இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் முடிந்தும் பிஎன் தேர்தலை நடத்த விரும்பவில்லை. இந்த நாடு தனது பாட்டனார் சொத்து என அது எண்ணுவதாகத் தோன்றுகிறது. அது குறித்து விசுவாசமுள்ள மலேசியர்கள் அனைவரும் வெட்கப்படுகின்றனர்.
கெட்டிக்கார வாக்காளர்: தேர்தலை தாமதப்படுத்துவதற்கு சாத்தியமான எல்லா சட்டப்பூர்வ வழிகளையும் பயன்படுத்த நஜிப் எண்ணியுள்ளார். இன்னும் அதிகமான வெகுமதிகளைக் கொடுத்து தமது உருமாற்ற நடவடிக்கைகள் உருப்படியான பலன்களைத் தரும் போது தேர்தலை நடத்தவே அவர் எண்ணியுள்ளார்.
அதன் வழி நீண்ட காலம் காத்திருக்கும் போது பொது மக்கள் ஆத்திரம் தணிந்து மன்னிப்பர் என்றும் எதிர்க்கட்சிகள் சிதறும் என்றும் அவர் நம்புகிறார்.
ஆனால் இந்த முறை மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. மாறாக எல்லா விஷயங்களையும் அவர்கள் அறிந்துள்ளனர். மாற்றத்தைச் செய்ய உறுதி பூண்டுள்ளனர்.
Cogito Ergo Sum: தில்லுமுல்லு வேலைகள், ஆவி வாக்காளர்கள், சட்ட விரோத வாக்காளர்கள் ஆகியவற்றால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் பெற வேண்டும்.
ஆனால் இன்னும் அது வெகுமதிகளைக் கொடுத்து முடிக்கவில்லை. ‘தண்டா புத்ரா’ திரைப்படம் காட்டப்படுவதற்கு குறி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் முழுமையாகத் திரையிடப்படவில்லை. அதனால் தான் தாமதம்.
நஜிப் இப்போது “சட்டப்பூர்வமில்லாத” பிரதமர்
டூட்: அம்னோ/பிஎன் தனது நன்மைக்காக சட்டங்களையும் விதிகளையும் திருத்தும், உடைக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
GE 13: நீங்கள் அவரை சிறுமைப்படுத்தலாம். சத்தம் போடலாம். உங்களால் வேறு என்ன செய்ய முடியும் ? அவர் உங்களை அலட்சியம் செய்து விடுவார்.
JT1E80: GE 13, நாம் அனைவரும் விழித்துக் கொண்டு அந்த சட்டப்பூர்வமல்லாத அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு வாக்களிக்க வேண்டும்.