‘ஊடகங்கள் ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்’

1sabahசாபா, லாஹாட் டத்துவில்  ஒப்ஸ் டவுலாட் குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள்  சூலு ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் இனி  குறிப்பிட வேண்டும்.  அத்துடன் சூலு சுல்தான் என்றும் கூறக்கூடாது.

1musaசாபா முதலமைச்சர் மூசா அமான் (இடம்) தலைமையில் செயல்படும் சாபா பாதுகாப்புக் குழு, இன்று காலை  இந்த உத்தரவை விடுத்தது. அதற்கான காரணத்தை அது குறிப்பிடவில்லை.

“பயங்கரவாதிகள் என்ற சொல்லையே பயன்படுத்துக;  சூலு சுல்தான் என்று பயன்படுத்த வேண்டாம். அவரை சுல்தானாக நாம் மதிப்பதில்லை” என அது வெளியிட்ட சுருக்கமான குறிப்பு கூறியது.

நேற்று பெர்னாமா அதன் செய்தி அறிக்கையில், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானை மேற்கோள்காட்டி, மற்றவர்களைப் பயமுறுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ள ஊடுருவல்காரர்களை இராணுவம் என்று அழைப்பது தகாது அறிவித்திருந்தது.

“தீமை இனபேதம் பார்ப்பதில்லை.  குறைந்த சமயப் பற்றும் விலங்குகள் போன்ற குணமும் கொண்டவர்கள், பேராசையாலும் அதிகார வெறியாலும் தீயவர்களாக மாறுவதுண்டு”, என்றாரவர்.