ஒரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கிய ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன் -னுக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அழுத்தம் கொடுக்கும் பொருட்டு தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
“மலேசிய இந்தியர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை அவை (பக்காத்தானும் பிஎன் -னும்) அங்கீகரிக்குமாறு செய்வதே உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம்,” என அவர் சொன்னார்.
“அவை அந்தப் பெருந்திட்டத்தில் கையெழுத்திட வேண்டும். அவை அதில் கையெழுத்திடாவிட்டால் அவை மனித உரிமைகளை மதிக்கவில்லை எனப் பொருள்படும்,” என்றார் அவர்.
அந்தப் பெருந்திட்டம் மீது விவாதம் நடத்த ஹிண்டராப்புடன் பிஎன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வேதமூர்த்தி சொன்னார்.
பக்காத்தானைப் பொறுத்த வரையில் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியுடன் நடத்தப்பட்ட விவாதங்கள் தேக்க நிலையை அடைந்து விட்டன என அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பில் உறுதியான பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த வேதமூர்த்தி தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்தார்.
“அந்த கடுமையான பிரச்னைகளுக்கு நிரந்தரமான, விரிவான தீர்வுகளைக் காண வேண்டிய” தேவையை வலியுறுத்துவது உண்ணாவிரதப் போரட்டத்தின் நோக்கம்,” என்றும் அவர் சொன்னார்.