உள்துறை அமைச்சர் அவர்களே, அவர்கள் இப்போது பயங்கரவாதிகளா ?

troops‘உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ?

ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை புத்ராஜெயா ஏற்றுக் கொள்கிறது

சின்ன அரக்கன்: லஹாட் டத்து ‘ஊடுருவல்காரர்களை’ ‘பயங்கரவாதிகள்’ என அதிகாரப்பூர்வமாக அழைப்பதற்கு இவ்வளவு காலம் பிடித்தது உண்மையில் வெட்கத்தை அளிக்கிறது.

ஆயுதங்களுடன் இந்த நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த அந்த ஊடுருவல்காரர்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு நேரடி மருட்டலை விடுத்தனர். அப்போது அவர்கள் பயங்கரவாதிகள் என அரசாங்கம் உணரவில்லையா ?

அந்த ‘ஊடுருவல்காரர்கள்’, ‘தீவிரவாதிகளும் அல்ல பயங்கரவாதிகளும் அல்ல’ என நமது உள்துறை அமைச்சரும் அறிக்கை விடுத்தார். அந்த ‘பயங்கரவாதிகள்’ நாட்டுக்குள் நுழைந்த முதல் நாள் தொடக்கம் அவர்களைப் பற்றிய அரசாங்க மதிப்பீடு தவறாகி விட்டது.

மலேசிய இனம்: சுலு ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகளும் அல்ல தீவிரவாதிகளும் அல்ல என பிப்ரவரி 18ம் தேதி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்த அறிக்கை பற்றி நான் குறிப்பிடுகிறேன்.

அதற்கு மூன்று வாரங்கள் கழித்து எட்டுப் போலீஸ்காரர்களும் படையெடுப்பாளர்களில் பலரும் கொல்லப்பட்ட பின்னரும் அரசாங்கம் தனது எண்ணத்தைப் பொது மக்களிடையே திணிக்க முயன்று வருகின்றது.

மலேசியாவில் பிறந்தவன்: அவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட வேண்டும் என்பதையும் ‘சுல்தான்’ என அழைப்பதால் தேவையற்ற அங்கீகாரம் கொடுக்கப்படுகின்றது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.

என்றாலும் சபா முதலமைச்சர் மூசா அமான் பத்திரிக்கைகளுக்கு உத்தரவிடுவதை நான் ஆட்சேபிக்கிறேன்.

நிருபர்களிடம் பேசும் எல்லா அரசாங்கப் பேராளர்களும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு விளக்கமும் அளிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

சாலி தாம்பாப்: உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ?

கைரோஸ்: சபா முதலமைச்சருடைய கண்கள் இறுதியில் திறந்து விட்டன. அதற்கு ஏன் இவ்வளவு காலம் பிடித்தது ? இரண்டு விஷயங்கள் அவரது கண்களையும் அம்னோ தலைமைத்துவத்தின் கண்களையும்  கட்டியிருக்க வேண்டும்

முதலாவது அவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால் சுமூகமாக அவர்கள் வரவேற்கப்பட்டிருக்க மாட்டார்கள். இரண்டாவதாக நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தயவால் சபாவில் உள்ள சுலு மக்களில் பெரும்பாலோர் நீல நிர அடையாளக் கார்டுகளை வைத்துள்ளனர். பழி வாங்கப்படலாம் என்ற அச்சமும் மலேசியாவில் வசிக்கும் பிலிப்பினோ மக்கள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமும் போலீஸ், இராணுவத் தளபதிகளுடைய கணிப்பை மறைத்திருக்க வேண்டும்.

பல நாட்கள் சென்ற பின்னர் அதுவும் நமது வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட பின்னர் ஊடுருவல்காரர்கள் என அழைக்கப்படும் அந்த அரக்கர்கள் நமது வீரர்களை கொன்று நமது மண்ணை அபகரிக்கவும் எண்ணியிருப்பதை நமது அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர்.

நெருக்கடியான நேரத்தில் நமது பிரதமர் வலுவான தலைமைத்துவத்தைக் காட்டவில்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது. நமது பிரதமரைச் சுற்றிலும் திறமையற்ற அமைச்சர்கள் இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

சிந்தனை: அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர் என்றும் பிலிப்பின்ஸ் கூறுகிறது.

எது எப்படி இருந்தாலும் அவர்கள் நமது மக்களை கொல்வதற்கு வந்தனர். அவர்களை எப்படி அழைத்தாலும் அவர்கள் மலேசியச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்.

உண்மை கசக்கிறது: அவர்களில் பெரும்பாலோரிடம் நீல நிற அடையாளக் கார்டு உள்ளது. அதனால் அவர்களை ‘உள்நாட்டுப் பயங்கரவாதிகள்’ என அழைக்கலாமே ?

Serena Peters 2b14: சுலு சுல்தான் இராணுவத்தை புத்ராஜெயா பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினால் மிண்டானோ நிலைத்தன்மையை சீர்குலைக்கும் பொருட்டு நாம் அவர்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்களையும் கொடுத்துள்ளதால் மலேசியாவும் பயங்கரவாத ஆதரவு நாடு என அர்த்தமாகி விடும்.

 

TAGS: