தண்டா புத்ரா மீதான அமைச்சரவை முடிவை அம்னோ தலைவர்கள் மீறுகின்றனர்

Tandaஅமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்ச அமைப்பாகும். அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது”

பெர்சே, மலேசியாகினி தண்டா புத்ரா திரையீட்டின் போது இழிவுபடுத்தப்பட்டன

தோலு: ‘தண்டா புத்ரா’ திரைப்படம் காட்டப்படுவதை குறைந்த பட்சம் 13வது பொதுத் தேர்தல் முடியும்  வரைக்கும் தடை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது.  அந்தத் திரைப்படம் இன உணர்வுகளைத் தூண்டி விடக் கூடும் என்றும் இன ஐக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.

இப்போது அந்தத் திரைப்படம் காட்டப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்பட்ட ரசிகர்களுக்கு மட்டும். ஆகவே யார் அமைச்சரவை முடிவை மீறுகின்றனர்.

அதற்கான பதில் தெளிவானது. அம்னோவைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பாக பிரதமர்      நஜிப் அப்துல் ரசாக். இந்த அப்பட்டமான அத்துமீறலுக்கு மற்ற அமைச்சர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

பிஎன் கூட்டணியில் மசீச, மஇகா போன்ற பல்வேறு இனங்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் இருந்த போதிலும் மற்ற இனங்கள், சமயங்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான பிரச்னைகள் உட்பட ஒவ்வொரு விஷயத்திலும் அம்னோ தான் முடிவு செய்கின்றது.

அம்னோவுக்கும் அடிபணியும் தலைவர்களைக் கொண்ட மசீச-வுக்கு சீனர்களும் மஇகா-வுக்கு இந்தியர்களும் ஏன் வாக்களிக்க வேண்டும் ?

உங்கள் அடிச்சுவட்டில்: அமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்சஅமைப்பாகும்.  அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது.

இப்போது பெல்டாவும் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகமும் அமைச்சரவையைக் காட்டிலும் மேலானவையா ?

இனிமேல் இந்த அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் யார் மதிக்கப் போகிறார்கள் ? சுய மரியாதையும் கௌரவமும் உள்ள எந்த அமைச்சரும் உடனடியாகப் பதவி விலகியிருக்க வேண்டும்.

கேலிக் கூத்து: பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அந்த முதுநிலை அதிகாரியின் பெயரைக் குறிப்பிடுங்கள்.  அந்தச் சம்பவம் மீது மாணவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும். நீங்கள் கல்வி கற்பது அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

Cogito Ergo Sum: கல்வியாளர்கள் என்ற முறையில் நியாயமான கருத்துக்கும் முரண்பாடான கருத்துக்கும்  இடையில் உள்ள வேறுபாட்டை அவர்கள் அறிய வேண்டும்.

அந்தத் திரைப்படம் அதிகாரத்துவப் பதிப்பாக இருந்தால் அதனை நியாயமான கண்ணோட்டமாகக் கருதக் கூடாது. அந்தத் திரைப்படத்துக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். உண்மையில் கல்வியாளர்களுக்கு அது சோகமான நாள் ஆகும்.

என்ன நடக்கிறது: நான் பிரதமரை மதிக்கிறேன். அவர் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நிறையச் செய்துள்ளார். ஆனால் இனவாதப் பிரச்னைகளை மட்டும் அவரால் முறையாக கையாள முடியவில்லை.

உணர்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்புவதற்கு அவர் ஏன் சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்கிறார். நாம் மற்றவர்களுடைய உணர்வுகளையும் மதிக்க வேண்டும். மலேசியா மிகவும் அழகான அமைதியான நாடு.  அதனை நிலை நிறுத்த வேண்டும்.

நியாயமானவன்: அந்தத் திரைப்படத்தின் தீய நோக்கம் மிகவும் தெளிவானது. இல்லையா ?

 

TAGS: