தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது (விரிவாக)

tianலஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்தது.

லஹாட் டத்துவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு அம்னோ அரசாங்கத்தின் சதித் திட்டம் மார்ச் மாதம் முதல் தேதி காலை மணி 11 வாக்கில் சொன்னதாக 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4 (1) (b) யின் கீழ் பத்து தொகுதிக்கான எம்பி-யுமான தியான் சுவா மீது குற்றம் சாட்டப்படுள்ளது.

தியான் சுவா சார்பில் வழக்குரைஞர்களான என் சுரேந்திரன், லத்தீபா கோயா, வில்லியம் லியோங், எரிக் பால்சென், மேலும் இருவர் ஆஜரானார்கள்.

“இது அரசியல் நோக்கம் கொண்டது. எனக்கு எதிராக அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. அதனைத் தூய்மை செய்வதற்கு நான் போராடுவேன்,” என தியான் சுவா நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர்  கூறினார்.

ஏப்ரல் 12ம் தேதி அந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி செக்கெரி மாமாட் அறிவித்தார்.

அந்தக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்துக்கு விண்னப்பிக்க பிரதிவாதித் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சுரேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் சார்பில் அரசாங்க வழக்குரைஞர்களான யூசைனி அமிர் அப்துல் கரீம், முகமட் பாரிசுல் ஹசான் ஆகியோர் ஆஜரானார்கள்.