சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்

tawiகடந்த புதன்கிழமையன்று தாவி தாவி மாநிலத்துக்கு அப்பால் பிலிப்பின்ஸ் கடற்படை தடுத்து வைத்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேர் மீது பிலிப்பின்ஸ் அரசாங்கம் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தவிருக்கிறது.

“அவர்களுக்கு எதிராக பொருத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுக் குழு ஒன்று செய்து வருகிறது,” என நீதித் துறை அமைச்சர் லெய்லா டி லிமா மணிலாவில் மலாகானாங் அரண்மனையில் நிருபர்களிடம் கூறினார்.tawi1

அந்தச் செய்தியை அரசாங்கத்துக்குச் சொந்தமான ராட்யோ இங் பாயான் ஒலிபரப்புச் செய்தது.

சுடும் ஆயுதங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்தது, தேர்தல் கால துப்பாக்கித் தடையை மீறியது போன்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றுள் அடங்கும் என டி லிமா கூறினார்.

மற்ற குற்றச்சாட்டுக்களும் நிச்சயம் உண்டு,” எனத் தெரிவித்த அவர் “அவை சபாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்,” என்றார்.

-இண்டர் அக்சன்