‘ஆகவே, அம்னோவைக் குறை சொல்வதும் இனிமேல் தேச நிந்தனையாகும்’

Tian Chua“அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ?

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்துறைத் தலைவர் உண்மையில் முட்டாள். அவதூறு சொன்னதற்காக  தியான் சுவா மீது நீதிமன்றத்தில் வழக்குப் போட அம்னோவுக்கு எல்லா உரிமையும் உண்டு.

ஆனால் அம்னோவுக்கு எதிரான அவதூறு தேச நிந்தனையாகாது. அம்னோ நாடு அல்ல, நாடு அம்னோவுமல்ல. நீதிமன்ற நடவடிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது.

அந்நிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட ஆயுதமேந்திய தாக்குதலை அம்னோவும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தவறாகக் கையாண்டனர். ஆயுதமேந்திய கொள்ளையர்கள் தீவிரவாதிகளும் அல்ல பயங்கரவாதிகளும் அல்ல என முதலில் அவர் கூறினார்.

இப்போது 10 மலேசியர்கள் கொல்லப்பட்டனர். தனது திறமைக் குறைவை மறைப்பதற்கு அவர்கள் தியான் சுவா சொன்ன கருத்துக்களை அம்னோ பயன்படுத்திக் கொள்ள முயலுகிறது.

லிம் சொங் லியோங்: பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அம்னோ மீது தவறாகக் குற்றம் சாட்டியிருந்தாலும் அது கிரிமினல் அவதூறாக மட்டுமே இருக்க முடியும். அம்னோ மீது பழி சுமத்துவது எப்போது தேச நிந்தனையானது ? அது என்ன இப்போது அரசர் அமைப்பா ?

விஜய்47: தேச நிந்தனை ? அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ? எப்போது அது தேசத் துரோகமானது ? உயிர் நீத்த வீரர்களை அவமானப்படுத்தியதால் தியான் சுவாவுக்கு இது வேண்டும் என சில மலேசியாகினி வாசகர்கள் கருத்துச்  சொல்லியிருக்கின்றனர்.

அந்த சுலு தாக்குதல் தொடர்பான பல கட்டுரைகளை நான் வாசித்துள்ளேன். ஒர் எழுத்தாளர் கூட நாட்டைத் தற்காப்பதில் உயிர் நீத்த வீரர்களைப் பற்றி சந்தேகம் எழுப்பவே இல்லை. நமது தலைமைத்துவத்தை பற்றியே ஒவ்வொருவரும் ஆத்திரமடைந்துள்ளனர்.

நமது தலைவர்கள் கடலில் சிக்கிக் கொண்டவர்களைப் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.  ஹிஷாமுடின் துணிச்சலாக படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எதிரிகளுடைய தாக்குதலை எதிர்கொள்ளும் போது கடமையைச் செய்யத் தவறியதற்காக அவர் போன்ற மக்கள் மீது தான் வழக்குப் போடப்பட வேண்டும்.

எதையாவது சொல்லிக் கொண்டிருப்பது தியான் சுவா-வின் இயல்பு என்றாலும் அவர் தவறு செய்தார் என்றால் மாற்று ஊடகங்களில் கருத்துச் சொன்ன அனைவரும் தவறு செய்தவர்களே.

ஸாபிஸோ: மூன்று வாரங்களுக்கு ஊடகங்களில் எந்தத் தகவலும் இல்லை. சபா ஊடுருவல்காரர்கள் மீது எந்த  நடவடிக்கையும் இல்லை. அதனால் சாதாரண மலேசியருக்குக் கூட சந்தேகம் வரும். தியான் சுவா மலேசியர்களுக்காக வெளியிட்ட அறிக்கைக்காக ஜெயிலில் அடைக்கப்பட்டால் அது அநியாயம்.

வீரா: அந்த குற்றச்சாட்டில் கெட்ட நோக்கம் இருப்பதை முதலாம் ஆண்டு சட்டக் கல்வி மாணவருக்குக் கூடத் தெரியும். முதலாவதாக தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது.

இரண்டாவதாக ‘பைபிளுக்கு எரியூட்டுங்கள்” என்பது உட்பட தேச நிந்தனை சொற்களைச் சொன்ன அம்னோ பெர்க்காசா போக்கிரிகளைப் பற்றி என்ன சொல்வது ?

டிபிஎன்: இப்ராஹிம் அலி இதற்கு முன்னர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்யப்பட்டார்.  ஆனால் இதுகாறும் குற்றம் சாட்டப்படவே இல்லை.

ஆனால் தியான் சுவா என வரும் போது முழு வேகத்தில் அரசுத் தரப்பு செயல்படுகிறது. வரும் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்.

 

TAGS: