அம்னோவுக்குச் செலுத்தும் வாக்கு மகாதீருக்குப் போடும் வாக்காகும்

BN‘பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது’

மூசா ஹித்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது

சிகியூ முவார்: நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து உங்களை எங்களுக்கு தெரியும். நீங்கள் நியாயமான மனிதர். உங்கள் கருத்துக்கள் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்குப் பிடிக்கவில்லை.

இந்த நாட்டின் வளப்பம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. உறிஞ்சப்படக் கூடாது.

இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இப்போது நாட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆகவே அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது மக்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும். துன் மூசாவுக்கு என் வாழ்த்துக்கள்.

டத்தோஸ்: ‘பொதுத் தேர்தலின் போது இனத்தை தங்கள் அரசியல் விஷயமாகப் பயன்படுத்துகின்றவர்கள் என்னைப் பொறுத்த வரையில் திவாலான அரசியல்வாதிகள்’

மூசா விடுத்துள்ள அந்த எளிமையான தெளிவான அறிக்கை மலேசியா எதிர்நோக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணத்தை உணர்த்துகிறது.  முன்னாள் துணைப் பிரதமருக்கு என் நன்றி.

அதனை பிஎன் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டிருந்தால் உயிர்வாழ்வதற்கு இவ்வளவு மோசமாக போராட மாட்டார்கள். அவர்கள் இப்போது மிகவும் மெலிந்த நூலிழையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரிஷ்: நன்றாகச் சொன்னீர்கள் துன் அவர்களே. துன் போன்ற நியாயமான சிந்தனையைக் கொண்ட மக்கள்  மலேசிய அரசியல் குறித்து சமநிலையான கருத்துக்களைப் பேசுவது அவசியமாகும்.

நான் அரசியல்வாதி இல்லை என்றாலும் 13வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் நாடு நொடித்துப் போகும் எனச் சொல்வது நியாயமாகாது என்ற துன் எண்ணத்தை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.

அதிகாரத்துக்கு வரும் எந்தக் கட்சியும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் மக்களுக்கு நன்மை தரும் மாற்றங்களைக் கொண்டு வரவே முயலும். தேசியப் பொருளாதாரத்திற்குப் பாடுபடும்.

அடுத்தடுத்த தேர்தல்களிலும் அது அதிகாரத்தைப் பெறுவதற்கு அதுவே ஒரே வழி.

மூன்றாம் கண்: பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது.

மூசா கொள்கைப் பிடிப்புள்ள அரசியல்வாதி. அதனால் தான் அவர் மகாதீர் அரசாங்கத்திலிருந்து முன் கூட்டியே விலகி விட்டார்.

அம்னோ/பிஎன் -னுக்கு செலுத்தும் வாக்கு மகாதீருக்கும் பெர்க்காசாவுக்கும் போடும் வாக்காகும்.

புதிய மலேசியா: “அரசியல்வாதிகள் தங்கள் ஆற்றலை மெய்பிக்க விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்றும் மூசா கேட்டுக் கொண்டார்.” உண்மையில் அந்த சொற்றொடர் நஜிப் கன்னத்தில் விழுந்த அறைக்கு ஒப்பாகும்.

மலேசியா888: மகாதீரைக் கண்டு நஜிப் மிகவும் அஞ்சுவது தான் பிரச்னைக்கு அடிப்படை ஆகும். எல்லாவிஷயங்களும் இப்போது மகாதீர் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

TAGS: