துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு ஒன்றுமில்லை

Tandaசர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின்  கூறுகிறார்.

“அந்தத் திரைப்படம் பொது மக்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் சில பிரிவினருக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.”

“சில பொறுப்புள்ள தரப்புக்கள் அதனைத் திரையிட வேண்டும் என முடிவு செய்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்,” என புத்ராஜெயாவில் முஹைடின் நிருபர்களிடம் கூறினார்.

1969ம் ஆண்டு மே 13 கலவரத்தை அந்தத் திரைப்படம் சித்தரிக்கும் முறை குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவுகளை தாம் கண்டிருப்பதால் அது பொது மக்களுக்கு திரையிடப்படுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.

“ஆனால் இப்போதைக்கு அதனை திரையரங்குகளில் திரையிடுவது பொருத்தமாக இருக்காது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என அவர் மேலும் சொன்னார்.

தண்டா புத்ரா திரையிடப்படக் கூடாது என அமைச்சரவை முடிவு செய்துள்ள போதிலும் பெல்டா குடியேற்றக்காரர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு அதனை அரசாங்கம் போட்டுக் காண்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.Tanda1

அது குறித்து வினவப்பட்ட போது தண்டா புத்ரா தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு திரையிடப்பட்டது அமைச்சரவை முடிவை “மீறியிருக்கலாம்” என மேலோட்டமாகத் தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு திரையிடப்பட்ட போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வேண்டுகோளுக்கு இணங்க அது போட்டுக் காண்பிக்கப்பட்டதாக பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறியதாக செய்திகள் வெளியாகின.

 

TAGS: