“ஏற்றத்தாழ்வான உங்கள் போராட்டம் வீணாகி விட்டதாக சிலர் சொல்லலாம். முடிவு எப்படி இருந்தாலும் சில போராட்டங்களை நடத்தத் தான் வேண்டும்”
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா 53வது வயதில் காலமானார்
விஜய்47: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் இனிமேல் இல்லை. அவரை எந்த இடத்தில் வைப்பது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர் ஹீரோவா, சந்தர்ப்பவாதியா, வணிகரா, தேச விசுவாசியா ?
ஏற்றத்தாழ்வான உங்கள் போராட்டம் வீணாகி விட்டதாக சிலர் சொல்லலாம். முடிவு எப்படி இருந்தாலும் சில போராட்டங்களை நடத்தத் தான் வேண்டும்.
அவர் நல்ல போராட்டத்தை நடத்தினார். அதனையும் சிறப்பாக நடத்தினார்.
கலா: அல்தான்துயா ஷாரிபு மரணம் தொடர்பாக பாலா சொல்லப் போகும் தகவல்கள் அம்னோ/பிஎன் ஆட்சி மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் பாலா-வின் மரணம் அனவைருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
பாலா மரணமடைந்திருக்கலாம். ஆனால் அல்தான்துயா மரணம் தொடர்பான உண்மை மடியாது.
ஜீன் பியரே: தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மலேசிய வரலாற்றில் நிச்சயம் இடம் பெறுவார். ஏனெனில் அவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினார். மனச்சாட்சிக்கு அஞ்சி அவர் நாடு திரும்பிப் போராட்டம் நடத்தினார். நாம் ஒரு ஹீரோவை இழந்து விட்டோம்.
சிகியூமூவார்: மலேசியாவில் நீதியை நாடும் அனைவருக்கும் பாலாவின் திடீர் மரணம் பேரிழப்பாகும். அவர் உறுதியும் துணிச்சலும் கொண்ட மனிதர். அல்தான்துயா கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என அவர் போராடினார்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து நல்ல குடிமக்களும் பாலாவை நிச்சயம் நினைவில் வைத்திருப்பார். அவர் கடைசி மூச்சு வரை போராடினார். யாருக்கும் அஞ்சவில்லை. இறைவனுடைய கருணையில் நம்பிக்கை வைத்திருந்தார்.
மஹாஷித்லா: அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள். நாட்டுக்கு வெளியில் பாலா கஷ்டமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அச்சமும் மன அழுத்தமும் அவரைப் பாதித்திருக்க வேண்டும்.
அல்தான்துயா ஷாரிபு கொலையில் முக்கியமான சாட்சியை நாம் இழந்து விட்டோம். பாலா செய்ய எண்ணியிருந்த – அல்தான்துயா கொலைக்கு பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளை அம்பலப்படுத்தி நீதிக்கு போராடுவோம்.
சின்ன அரக்கன்: பாலா மரணம் குறித்த செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. மிகவும் வருத்தப்பட்டேன். பாலா-வின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
லாய் தாக் மிங்: அன்புள்ள பாலா, நீங்கள் முழு மனதுடன் நல்ல போராட்டத்தை நடத்தினீர்கள். நீங்கள் வேட்டையாடப்பட்டீர்கள். ஆனால் வலுவாக நின்று போராடினீர்கள்.
பெஸ்தாரி நாட்களிலிருந்து உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு நாள் தேசிய பிரமுகராகக் கூடும் என எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கின்றீர்கள்.
நீங்கள் நன்றாகப் போராடினீர்கள். அதற்காக உங்கள் உயிரையும் கொடுத்து விட்டீர்கள். உண்மைக்கு போராடுவதற்கு உங்கள் காலடிச் சுவடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.