தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை சவப் பரிசோதனை உறுதி செய்தது

Balaதனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை நேற்றிரவு நடத்தப்பட்ட சவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது.

சுங்கை பூலோ மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு பின்னர் பாலாவின் நல்லுடல் நேற்றிரவு மணி 11.40 வாக்கில் ரவாங்கில் உள்ள அவரது குடும்பத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாலாவின் நண்பரான ராஜா பிள்ளை கூறினார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு பாலாவின் நல்லுடலுக்கு செராஸ் மின்சுடலையில் எரியூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு கொலையைச் சூழ்ந்துள்ள விவகாரத்துடன் அணுக்கமான தொடர்புடையவர் எனக் கருதப்பட்ட பாலா நேற்று திடீரெனக் காலமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர் அண்மையில் தான் இந்தியாவிலிருந்து திரும்பினார்.

கடந்த வாரம் மலேசியாகினி அவரை பேட்டி கண்டது. தாம் உற்சாகமாக இருப்பதாகவும் அல்தான்துயா ஆவி தாம் இறப்பதை விரும்பவில்லை என்றும் அல்தான்துயா மரணம் சம்பந்தப்பட்ட உண்மையைச் சொல்ல வேண்டிய பணி தமக்கு இருப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அந்த வேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இருதய ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது அப்போது கண்டு பிடிக்கப்பட்டது.

 

TAGS: