பிஎன் ஆதரவு செராமாவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்தனர்

protestபினாங்கு பெனாந்தி, குவார் பெராஹு தேசிய இடைநிலைப் பள்ளியில் நேற்றிரவு நடைபெற்ற பிஎன் ஆதரவு செராமா ஒன்றுக்கு இடையூறு செய்ய பிகேஆர் ஆதரவாளர்களையும் உள்ளூர் கிராம மக்களையும் கொண்ட ஒரு கும்பல் முயற்சி செய்த போது குழப்பம் ஏற்பட்டது.

லஹாட் டத்து சம்பவம் பற்றியும் மலாய் பைபிள்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது பற்றியும் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு நிகழும் பள்ளிக்கூட வளாகத்துக்குள் அந்தக் கும்பல் சென்றது.

அரசியல் தன்மையைக் கொண்ட அந்த செராமா அரசியல்வாதிகளுடைய பிரச்சாரங்கள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கூட வளாகத்தில் நிகழ்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.protest1

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்- அவர்களிடையே மாநில பிகேஆர் இளைஞர் தலைவர் அமிர் கசாலியும் காணப்பட்டார்- இரவு 9 மணி முதல் பள்ளிக்கூட வளாகத்தில் கூடத் தொடங்கினர். ஆனால் அவர்கள் பள்ளிக்கூடக் கட்டிடத்துக்குள் நுழைவதை 100 போலீஸ்காரர்களைக் கொண்ட போலீஸ் படை தடுத்து விட்டது.

2010ம் ஆண்டு பிகேஆர் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் சுயேச்சை எம்பி-யான கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின், Tolak Individu Bernama Anwar Ibrahim என அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பின் முகமட் ஸாஹிட் முகமட் அரிப் ஆகியோர் அந்த பிஎன் ஆதரவு செராமாவில் பேசினார்கள்.

வெளியில் ஆர்ப்பாட்டம் கூச்சலாக இருந்தாலும் அவர்கள் தங்களது உரையை நிகழ்த்தி முடித்தனர். அப்போது கலவரத்தைத் தூண்டியதாக மூத்த குடிமகன் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ‘தேர்தல் காலத்தில் இது வழக்கமான சூழ்நிலை’ என்றும் செபெராங் தெங்கா ஒசிபிடி அஸ்மான் அப்துல் லா கூறினார்.

“குழப்பம் ஏதுமில்லை. சிறிய இடையூறு மட்டுமே. நாங்கள் கலகத் தடுப்புப் போலீசார் உட்பட போலீஸ் அதிகாரிகலை நிறுத்தியுள்ளோம்,” என்றார் அவர்.

பெர்க்காசா அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததை உறுதிப்படுத்தாத அஸ்மான் அது செராமா என்பதை மறுத்தார் .  அது ‘வெறும் விளக்கக் கூட்டம்” என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: