நேற்று சாபாவில் ஊடுருவல்காரர்களுடன் நான்கு தடவை போலீசார் மோதிக்கொண்டனர்

1armyலாஹாட் டத்து அருகே, தஞ்சோங் பத்துவில் ஊடுருவல்காரர்களைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுள்ள பாதுகாப்புப் படைகள் நான்கு தடவை பகைவர்களுடன் மோதிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை மணி 8.05-க்கும் மாலை மணி 5-க்குமிடையில் நிகழ்ந்த அச்சண்டைகளில் எவரும் காயமடையவில்லை என சாபா போலீஸ் ஆணையர் ஹ்ம்சா தாயிப் கூறினார்.

1army1நேற்று சண்டாகானில் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற ஐயத்தின்பேரில் மூவரைப் பாதுகாப்புப் படைகள் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்களையும் சேர்த்து  இதுவரை 2012 பாதுகாப்புக் குற்றச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆகும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று அவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். லாஹாட் டத்துவுக்கு அருகில் பெல்டா சஹாபாட்டில் நடைபெற்ற அச்செய்தியாளர் கூட்டத்தில் இராணுவத்தின் முதல் டிவிஷன் தளபதி மேஜர்-ஜெனரல் அஹ்மட் ஸாக்கி மொக்தாரும் கலந்துகொண்டார்.

த்ஞ்சோங் பத்துவில் 50-க்கும் குறைவான பயங்கரவாதிகள்தான் இருப்பதாக நம்பப்படுவதால் பாதுகாப்புப் படைகளின் துடைத்தொழிப்பு நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு வந்து விடும் என்று ஹம்சா நம்புகிறார்.

– Bernama