‘தெளிவான ஆதாரங்கள் காட்டப்பட்டும் அந்த அத்தியாயம் தொடருகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரை யாரும் நீதிக்கு முன் நிறுத்தவில்லை’
வரியையும் பங்குதாரர் விதிகளை ஏய்ப்பது எப்படி சரவாக் பாணி
மலேசிய இனம்: சந்தேகத்துக்குரிய பணம் பெருமளவில் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்திருக்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகும். அவற்றில் பெரும்பகுதி மலேசியா, இந்தோனிசியா, சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு ஆகியவற்றிகிருந்து செல்கின்றன.
அம்னோ/பிஎன் தலைவர்களும் அவர்களுடைய சேவகர்களும் அங்கு பணத்தை வெள்ளையாக்குவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட் சட்ட விரோதமாக தேடிய பணத்தில் ஒரு பகுதியை சிங்கப்பூரில் வைத்துள்ளார் என்பது இப்போது தெளிவாகி விட்டது. (பிரிட்டன், கனடா ஆகியவற்றிலும் உள்ளது)
சபா முதலமைச்சர் மூசா அமானும் சட்ட விரோதமாக தேடிய பணத்தை தமது கையாளான மைக்கல் சியா வழியாக சிங்கப்பூரில் பதுக்கி வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.
இப்போது ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு சிங்கப்பூரில் 30 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் இருப்பது அம்பலமாகியுள்ளது.
அந்தத் தகவல்கள் பெரிய பனிப்பாறையின் நுனியாகக் கூட இருக்கலாம். கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்கும் போது அம்னோ-பிஎன் தலைவர்கள் சிங்கப்பூர் வங்கிகளில் வைத்துள்ள சட்ட விரோத பணம் குறித்த முழுத் தகவல்களைக் கோர வேண்டும்.
நடராஜன் ரெங்கசாமி: ‘சிங்கப்பூர் சீனப் பெருஞ்சுவரை’ வைத்துள்ளது என வழக்குரைஞர் அல்வின் சொங் கூறுகிறார்.
நான் அது குறித்து ஏன் கேள்விப்பட்டுள்ளேன். சட்ட விரோதப் பணத்தில் பெரும் பகுதி சிங்கப்பூரில் பதுக்கப்படுகின்றது. அதனை வெளியிடுவதற்கு எதிரான பாதுகாப்பை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குகின்றது. பல தொழில் அதிபர்களுக்கு அது நன்கு தெரியும்.
நியாயமானவன்: அமான்கேட் ஊழல் நினைவிருக்கிறதா ? சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட பணம் சிங்கப்பூர் டாலரில் இருந்தது. அது பெரும்பாலும் சிங்கப்பூர் கணக்குகளிலிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.
உலக வரைபடத்தில் சிறிய புள்ளியான சிங்கப்பூர் தன்னை சுதந்திரமான தூய்மையான சமுதாயமாக பறை சாற்றிக் கொள்கிறது. ஆனால் அது கறை படிந்த பணத்தை மறைத்து வைப்பதற்கான இடமாக திகழ்கிறது.
ஜின் பியரே: அந்தத் தகவல் சிங்கப்பூருக்கு உண்மையில் கரும்புள்ளியாகும். பர்மியர்களும் இந்தோனிசியர்களும் சட்ட விரோதமாகத் தேடிய பணத்துக்கு அந்த நாடு அடைக்கலம் கொடுப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது அது என்ன சொல்லப் போகின்றது ?
மஹாஷித்லா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் வருமான வரி வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
மலேசியாவிலிருந்து வரும் ஊழல் பணத்தைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் அந்த சிங்கப்பூர் ‘பெருஞ்சுவரை’ உடைக்கும் வழிகளை மலேசியர்கள் ஆராய வேண்டும்.
டிராவிச்: தெளிவான ஆதாரங்கள் காட்டப்பட்டும் அந்த அத்தியாயம் தொடருகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரை யாரும் நீதிக்கு முன் நிறுத்தவில்லை.
நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அதிகாரம் மாறாவிட்டால் எந்த மாற்றமும் இருக்காது என நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஸ்விபெண்டர்: நான் அல்வின் சொங்-ஆக இருந்தால் லிங்கம் தமது தற்காப்புக்காகச் சொன்ன – “அது என்னைப் போலத் தோற்றமளிக்கிறது, என்னைப் போல தொனிக்கிறது ஆனால் அது நான் அல்ல” என்ற அதே சொற்றொடரைப் பயன்படுத்துவேன்.
சட்ட விரோத நடவடிக்கைகள் அந்தத் தீவு நாட்டில் செய்யப்படாத வரையில் கறை படிந்த பணத்துக்குப் பாதுகாப்பான புகலிடமாக சிங்கப்பூர் திகழ்கிறது.
அந்தப் பணம் எந்த ஆதாரத்திலிருந்து வருகிறது என்பதில் அதற்கு அக்கறையில்லை. மற்ற இடங்களைச் சேர்த்த பணம் சிங்கப்பூரில் குவித்து வைக்கப்படுவதை அது ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த நாட்டில் கறை படிந்த எதனையும் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் பெரிய பிரம்புடன் அது வந்து விடும்.
அதன் வழி அது மிகவும் தூய்மையானது என்ற தோற்றம் அனைத்துலக அளவில் நிலை நிறுத்தப்படும்.
டாவுட்: சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள தார்மீகச் சீர்கேட்டை அதன் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மாற்றத்துக்கு வாக்களிக்கவும் அவர்கள் ஆயத்தமாக உள்ளனர். சிங்கப்பூர் கௌரவமான அரசாங்கம் என அழைப்படும் ஒன்றை பெற்றுள்ளது. ஆனால் மற்ற இடங்களில் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவது குறித்து அது ஒரு கண்ணை மூடிக் கொள்ளத் தயாராக இருக்கின்றது.