‘டாக்டர் மகாதீர், ரோஸ்மா புத்தகத்தைக் கிண்டல் செய்கிறார்’

Rosmah‘அவரது சாதனைகள் என்ன ? அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியா ? ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம்  வென்றாரா ? அவருக்கு முதுகலைஞர் பட்டம் (master’s) பட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அதனால்  என்ன’

டாக்டர் மகாதீர்: ரோஸ்மா சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்

கைரோஸ்: பிரதமர் மனைவி ரோஸ்மா மான்சோர் மீது டாக்டர் மகாதீர் முகமட் இப்போது வேறு பல்லவியைப்   பாடுவது மிகவும் வினோதமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் ரோஸ்மாவை அவர் சுமையை எனக் கூறி வெறுத்தார். இன்று அவரை பாராட்டுகிறார். தேசியச்  சின்னம் என்று கூடப் புகழ்கிறார். ரோஸ்மா சுய சரிதையை எதிர்காலத் தலைமுறையினர் படிக்க வேண்டும்  என்று கூட அவர் சொல்கிறார். ஏன் இந்த நேர் மாற்றம் ?

அதற்கான பதில் தெளிவானது. வேகமாக மூழ்கும் கப்பலில் தாங்கள் இருப்பது மகாதீர், ரோஸ்மா, நஜிப்
ஆகிய மூவருக்கும் நன்கு தெரியும். ஆகவே ஒர் ஐக்கியமான முன்னணியை காட்டுவோம் என அவர்கள்
எண்ணியிருக்க வேண்டும். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒன்றாக இருப்போம் என அவர்கள் முடிவு செய்திருக்க  வேண்டும்.

மக்கள் இப்போது கல்வி கற்றுள்ளதையும் விவேகமாகச் சிந்திக்கின்றனர் என்பதையும் அவர்கள் மறந்து
விட்டனர். அதற்காக மாற்று ஊடகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் இப்போது பிரச்னைகளை
நன்கு புரிந்து கொண்டுள்ளோம். எங்களை எளிதாக முட்டாளாக்க முடியாது.

ரோஸ்மா தமது புத்தகத்தில் விரும்பும் எதனையும் எழுதட்டும். பொய்களை அடுக்கட்டும். அவை உண்மையை   மறைத்து விடாது. அவர் செய்த பாவங்கள் கால ஒட்டத்தில் அவரை பிடித்து விடும்.

சின்ன அரக்கன்: ‘இப்போது தொடக்கம் 100 அல்லது 200 ஆண்டுகள் வரையிலான தலைமுறையினருக்கு
வழிகாட்டியாக’ விளங்க ரோஸ்மா சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என
மகாதீர் சொல்லியிருக்கும் யோசனை, கிண்டல் என்றே நான் கருதுகிறேன்.

மகாதீர் அந்த யோசனையை உண்மையிலேயே சொன்னார் என்றால் அந்தப் புத்தகம் நமது மாணவர்களை
அறிஞர்களாக மாற்றாது என்றாலும் ‘கெட்ட தலைவர்களாக’ மாற்றும் என நான் நம்புகிறேன்.

பள்ளிக்கூடங்களில் அதனைத் தேர்வுப் பாடமாக்கி அதில் மாணவர்கள் கட்டாயமாக கிரடிட் தேர்ச்சி பெற
வேண்டும் எனச் சொல்லலாமே ?

சிப்முங்க்: ரோஸ்மா புத்தகத்தை படித்த பின்னர் எல்லா மாணவர்களும் தங்கள் பெற்றோர்கள் செலவுக்குப்
பணம் கொடுக்கா விட்டால் சி4-ஐ பயன்படுத்த முனையக் கூடும்.

மகாதீர் பின் வரும் தலைப்புக்களில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என நான் யோசனை சொல்கிறேன்: 1)
மலாய்க்காரர்களைக் காட்டிலும் எப்படி மேலான மலாய்க்காரர் ஆவது ?  2) அடையாளக் கார்டு திட்டம் செய்ய
வேண்டியதும் செய்யக் கூடாததும்  3) நீங்கள் பிரதமரானால் எப்படிப் பணம் பண்ணுவது ?  4) இனங்களுக்கு
இடையில் பிளவை ஏற்படுத்த சிறந்த ரகசியங்கள்  5) சேவகர்கள்-சிறந்த வர்த்தகப் பங்காளிகள் 6) மலேசியாவில்  எப்போதும் பிரதமர் 7) அம்னோ நாளை என்று இல்லை .

அந்தப் புத்தகங்கள் நன்கு விற்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அந்த ஏழு புத்தகங்களை
வாங்கினால் ரோஸ்மா புத்தகத்தை இலவசமாகக் கொடுக்கலாம்.

பெர்ட் தான்: மகாதீர் அவர்களே உண்மையில் நீங்கள் நகைச்சுவையாக பேசியிருக்க வேண்டும். பிரதமருடைய மனைவியின் புத்தகத்தை வெளியிடுவது உங்கள் உரிமை. நீங்கள் அவரை எப்படி வேண்டுமானாலும்  பாராட்டலாம். எங்களுக்கு அது பற்றிக் கவலையில்லை. அது தனிப்பட்ட விவகாரம்.

ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அந்தப் புத்தகம் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம்
செய்யப்பட வேண்டும் என நீங்கள் சொன்னால் அது எங்கள் வர்த்தகமாகி விடும். ஏனெனில் அது எங்கள்
பிள்ளைகளை சம்பந்தப்படுத்துகின்றது.

‘அவரது சாதனைகள் என்ன ? அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியா ? ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம்
வென்றாரா ? அவருக்கு முதுகலைஞர் பட்டம் (master’s) பட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அதனால்
என்ன’

மகாதீர் அவர்களே, உங்கள் மனைவி மருத்துவராகத் தேர்ச்சி பெற்ற இரண்டாவது மலாய் மாது ஆவார்.
அவரைப் பற்றிய புத்தகம் பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்பட்டால் நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்.

ரோஸ்மாவிடமிருந்து பிள்ளைகள் குறிப்பாக இளம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்று  தான். விலை உயர்ந்த வைர மோதிரங்களயும் பிர்க்கின் கைப்பைகளையும் பெற வேண்டுமானால் பிரதமரை  நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அதுவாகும்.

கண்டர்பிரிகியான்: உண்மையில் மகாதீர் கிண்டல் செய்கிறார். தாம் வெறுக்கும் ஒருவரைப் பற்றி அவர் ஏதாவது   சொல்ல விரும்பினால் அதனை நேரடியாகச் சொல்ல மாட்டார். மறைமுகமாக ஏதும் அறியாதவரைப் போல  சொல்வார். அதனை அந்த நபர் உணரும் போது தாக்கம் கடுமையாக ஏற்பட்டிருக்கும்.

ரோஸ்மா மகாதீர் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளாரா ?

TAGS: